ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி பரபரப்பான கட்டத்தில் போட்டியின் இறுதிப்பந்தில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது ஆப்கானிஸ்தான அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இன்று இந்த தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.
வழக்கம்போல் காப்பாற்றிய நபி
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு நட்சத்திர பேட்ஸ்மேன் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் செடியுல்லாஹ் அடால் 3 ரன்னில் வெளியேறினார்.
ஆப்கானிஸ்தான் அணி 10. 4 ஓவரில் 58 ரன்கள் எடுத்து ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்த நேரத்தில் ஒரு முனையில் கரீம் ஜனத் பொறுமையாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 49 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் அதிரடியாக விளையாடிய முகமது நபி 27 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. நகர்வா 3 விக்கெட் கைப்பற்றினார்.
ஜிம்பாப்வே அணி போராட்டம்
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரைன் பென்னன்ட் 49 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். மூன்றாவது இடத்தில் வந்த டியான் மேயர்ஸ் 29 பண்புகளில் 32 ரன்கள் எடுத்தார். நட்சத்திர ஆட்டக்காரர் கேப்டன் சிக்கந்தர் ராஸா 7 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஏமாற்றும் தந்தார்.
இதையும் படிங்க : பும்ரா இனி எனக்கு பிரச்சனை இல்லை.. அவருக்கு எதிராக காபாவில் இதை செய்யப் போகிறேன் – மெக்ஸ்வீனி பேட்டி
இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் டஷிங்கா முசேகிவா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 13 பந்தில் 16 ரன்கள் எடுத்து, பரபரப்பான போட்டியில் இறுதிப்பந்தில் ஜிம்பாப்வே அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். பெரிய அணிகளை எளிதாக வீழ்த்தி வந்த ஆப்கானிஸ்தான் அணி தற்பொழுது ஜிம்பாப்வே சென்று முதல் போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது.