இந்திய ஒருநாள் உலகக்கோப்பை அணியின் மாற்று தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கான தேர்வுகள் குறித்து முன்னாள் வீரர் தனது முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கான இடங்கள் குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு சிறந்த பேட்டர்களை தேர்ந்தெடுப்பது குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
தற்போதைய அணியின் சேர்க்கை மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, எந்தெந்த பிளேயர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வசீம் ஜாஃபர் பேசும்போது “நான் சஞ்சு சாம்சனை அந்த இடத்தில் பார்க்கவில்லை. பேக்கப் ஓப்பனராக வர யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் சரியான சாய்ஸ் ஆக இருப்பார். மேலும் சாய் சுதர்சனையும் மற்றொரு ஆப்ஷனாக பரிசீலிக்கலாம்,” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர் பேட்டராக ருதுராஜ் கெய்க்வாட் அல்லது இஷான் கிஷன் ஆகியோர் நல்ல ஆப்சன்களாக இருப்பார்கள்,” என்று கூறி இருக்கிறார்.






