இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு எதிராக இனி தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புவதாக ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டு தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் மைதானத்தில் துவங்க இருக்கிறது.முதல் இரண்டு போட்டிகளில் 2 அணிகளும் ஒரு போட்டியை வென்று இருப்பதால் இந்த போட்டியை வெல்வது இரண்டு அணிகளுக்குமே முக்கியமானது.
இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் தந்த நம்பிக்கை
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா துவக்க இளம் ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனி லபுசேன் உடன் இணைந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மிக முக்கியமாக அவர் 39 ரன்கள் எடுத்திருந்தாலும் கூட, விளையாடுவதற்கு கடினமான சூழ்நிலையில் 109 பந்துகளை சந்தித்து இருந்தார்.
தற்பொழுது இந்த இளம் வீரருக்கு இது மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. எனவே பும்ராவை அதிகம் எதிர்கொள்வதின் மூலமாக அவர் பந்துவீச்சில் தன்னால் எளிதாக விளையாட முடியும் என்று நம்புகிறார். மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு எதிராக சிறப்பான சில விஷயத்தை செய்ய முடியும் என்றும் நம்புகிறார்.
காபாவில் சில பன்ச் பும்ரா பந்துவீச்சில் விடப் போகிறேன்
இதுகுறித்து நாதன் மெக்ஸ்வீனி கூறும் பொழுது “எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பும்ரா மாதிரியான ஒரு பந்துவீச்சாளரை எதிர்கொள்வதை விட வேறு எதுவும் கடினமாக இருந்து விடப் போவது கிடையாது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரை விளையாடியதன் மூலமாக நான் கொஞ்சம் நம்பிக்கை கொள்கிறேன். அவரை அதிகம் எதிர்கொள்வதின் மூலமாக நான் அவரை சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க : 81 ரன்கள் 9 விக்கெட்.. ஸ்மிருதி மந்தனா சாதனை சதம் வீண்.. இந்திய அணியை ஆஸி ஒயிட் வாஸ் செய்தது
“நான் அவரை முதன்முறையாக எதிர்கொள்கிறேன். மேலும் அவர் மிகவும் உலகத்தரம் வாய்ந்த ஒரு பந்துவீச்சாளர். நான் எதிர்கொண்ட பல பந்துவீச்சாளர்களிடமிருந்து அவர் மிகவும் வித்தியாசமானவர். நான் மூன்றாவது டெஸ்டில் அவரை எதிர்கொள்ளும் அளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கிறேன். மேலும் அவருக்கு எதிராக சில பன்ச்களை விட முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






