2022 டி20 உலகக் கோப்பையின் தகுதி சுற்றி இறுதியில் வெற்றி பெற்ற 2 அணிகள் !

0
460
Zimbabwe T20 Worldcup 2022

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பித்து நவம்பர் 13ஆம் தேதி முடிகிறது. கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் கோவிட் தொற்றால் யு.ஏ.இ-யில் நடந்தது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோத, ஆஸ்திரேலியா அணி வென்று சாம்பியன் ஆனது!

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் முதலில் தகுதி சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து சூப்பர் 12 சுற்றில் தலா ஆறு அணிகளாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இதிலிருந்து ஒவ்வொரு குழுவிலும் இரண்டு அணிகள் என நான்கு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரையிறுதி ஆட்டங்கள் நடத்தப்பட்டு, அதிலிருந்து வெற்றி பெறும் இரண்டு அணிகளை வைத்து இறுதிபோட்டி நடத்தப்படுகிறது.

- Advertisement -

தகுதிச் சுற்றுப் போட்டிகள் இல்லாமல் மொத்தம் 33 போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், இறுதி போட்டியில் தோற்ற அணியான நியூசிலாந்து அணியும் மோதிக்கொள்கின்றன.

இதில் இரண்டாவது க்ரூப்பான பி குரூப்பில் இந்தியாவும் பாகிஸ்தான் அணிகளும் இடம்பெற்று உள்ளது. இரு அணிகளுக்குமான போட்டி அக்டோபர் 23ஆம் தேதி நடக்கிறது. மேலும் இந்தியா இடம்பெற்ற குழுவில் தென்ஆப்பிரிக்க பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்று உள்ளன.

- Advertisement -

இந்த நிலையில் இன்று நடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்றுப்போட்டியில் ஜிம்பாப்பே அணி பப்பு நியு கினியா அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பப்பு நியு கினியா அணி இருபது ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது. மேலும் இன்னொரு அணியாக நெதர்லாந்து அணியும் டி20 உலகக்கோப்பை தொடருக்குத் தகுதி பெற்றிருக்கிறது!

- Advertisement -