ஜிம்பாப்வே 7பேர் ஒற்றை இலக்கம்.. 10 ஓவரில் ஆட்டத்தை முடித்த இலங்கை.. தொடரையும் வென்றது

0
264
Zimbabwe

ஜிம்பாப்வே ஆண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்திருக்கிறது.

ஜிம்பாப்வே ஒரு நாள் தொடரை இழந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்து மூன்றாவது போட்டிக்கு காத்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று கொழும்பு மைதானத்தில் தொடரை யாருக்கு என்று முடிவு செய்யும் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே அணி கடந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்று முற்றிலுமாக அவர்களது பேட்டிங் யூனிட் சரிவுக்கு உள்ளானது. அந்த அணியின் பிரையன் பென்னெட் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். சீன் வில்லியம்ஸ் 15, டினாசே 12, சிக்கந்தர் ராஸா 10, ரன்கள் எடுத்தார்கள். இந்த நால்வரை தவிர மீதி ஏழு பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. 14.1 ஓவர்களில் 82 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணியின் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா நான்கு ஓவர்களுக்கு 15 ரன்கள் மட்டும் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். அஞ்சல மேத்யூஸ் மற்றும் மதிஷா தீக்ஷனா இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி குசால் மெண்டிஸ் 33 ரன்கள் விக்கெட்டை மட்டும் கொடுத்து, 10.5 ஓவரில் இலக்கை எட்டி, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. களத்தில் ஆட்டம் இழக்காமல் பதும் நிஷாங்கா 39, தனஞ்செய டி சில்வா 15 ரன்கள் எடுத்தார்கள்.

இந்த வருடம் ஜூன் மாதத்தில் டி20 உலக கோப்பை தொடர் இருக்கின்ற காரணத்தினால், அதை நோக்கி இலங்கை கிரிக்கெட் அணி அதிக டி20 தொடர்களில் விளையாடுவதற்கு முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மேலும் டி
டி20 தொடருக்கு தயாராகும் விதமாக மூத்த வீரர் அஞ்சலோ மேத்யூஸ் கொண்டு வந்திருக்கிறது.