பும்ராவுக்கே இப்படி சம்பவம் பண்ணி யாரையும் பார்த்ததில்ல.. பஞ்சாப் பையன் வேற லெவல் – ஜாகிர் கான் பேச்சு

0
30
Zaheer

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர் அசுதோஸ் சர்மா விளையாடிய அதிரடி இன்னிங்ஸ் பலரையும் கவர்ந்திருக்கிறது. இவரது அதிரடியான பேட்டி குறித்து இந்திய முன்னாள் வேகப் பந்துவீச்சு நட்சத்திரம் ஜாகிர் கான் பாராட்டி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தோல்வி உறுதியாகி இருந்த நிலையில், பேட்டிங் செய்ய உள்ளே வந்த அசுதோஸ் சர்மா சந்தித்த முதல் பத்து பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் பறக்க விட்டு ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

மேலும் இதுவரையில் கடைசிக் கட்டத்தில் பேட்டிங் வந்து சில பந்துகளை மட்டுமே சந்தித்து விளையாடும் வாய்ப்பை பெற்றவர், நேற்று கொஞ்சம் கூடுதல் பந்துகளை சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். இதன் காரணமாக அவர் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் ஆக சரியான கிரிக்கெட் ஆட்கள் விளையாடக்கூடியவராக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

அவர் பந்தை வெறுமனே பலமாக அடிக்க கூடியவராக மட்டுமில்லாமல், ஒரு பந்தை எங்கு அடிக்க வேண்டும் எனவும், ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் எனவும், சில தெளிவான திட்டங்கள் உடன் அற்புதமாக விளையாடினார். எனவே அவர் ஐபிஎல் தொடரில் எதிர்காலத்தில் சிறந்த இந்திய பினிஷிங் பேட்ஸ்மேன் ஆக வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

அசுதோஸ் சர்மா இன்னிங்ஸ் குறித்து பேசி இருக்கும் ஜாகிர் கான் கூறும் பொழுது ” நேற்று இரவு பும்ரா பந்துவீச்சில் அசுதோஸ் சர்மா அப்படி ஒரு ஸ்வீப் ஷாட் விளையாடியதை பார்த்த பொழுது அவர் வேறொரு மண்டலத்தில் இருப்பதாக தெரிந்தது. பும்ராவின் யார்க்கருக்கு எதிராக அப்படி ஒரு ஸ்வீப் ஷாட்டை வேறு யாரும் விளையாடி நான் பார்த்தது கிடையாது. அவர் பந்தை மிக நன்றாக ரீட் செய்து விளையாடுவது அற்புதமாக இருக்கிறது

- Advertisement -

இதையும் படிங்க : தோனி இந்தியாவில் மட்டுமல்ல.. தென் ஆப்பிரிக்காவிலும் கிங்தான்.. என் காதலியே சொல்கிறாள் – டேல் ஸ்டெயின் பேட்டி

நான்கு விக்கெட்டுகளை அந்த அணி வேகமாக இழந்த பொழுது, அவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பில் இருப்பார்கள் என்று யார் நினைத்திருப்பார்கள்? ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஸ் சர்மா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடர்ந்து அற்புதங்களை செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஒரு போட்டியை வென்று அந்த அணிக்கு அவர்கள் இரண்டு புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.