“பெரிய பிளேயர்சே பக்கத்துல வர முடியாது.. நீதான்பா எதிர்காலம் கலக்கு” – ஜாகீர் கான் ஜெய்ஸ்வாலுக்கு பாராட்டு

0
599
Zaheer

மார்ச்-7. இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரையில் 5 போட்டிகளில் 9 இன்னிங்ஸ் விளையாடி இருக்கும் ஜெய்ஸ்வால் மொத்தம் 712 ரன்கள் குறித்து இருக்கிறார்.

ஜெய்ஸ்வால் குவித்துள்ள இந்த ரன்களில் இரண்டு இரட்டை சதம் மூன்று அரை சதங்கள் அடக்கம். சுனில் கவாஸ்கருக்கு அடுத்து ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்கள் கடந்த இரண்டாவது இந்தியர் என்கின்ற பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் டெஸ்ட் போட்டிகள் அளவில் பிராட் மேனுக்கு அடுத்து குறைந்த டெஸ்ட் போட்டியில் ஆயிரம் கண்களைக் கடந்தவராகவும், குறைந்த இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்களில் வினோத் காம்பளிக்கு அடுத்த இடத்தையும் பிடித்திருக்கிறார்.

இத்தோடு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்கின்ற சாதனையையும் படைத்திருக்கிறார். 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் முதலில் ஆயிரம் ரன்களை அடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக மெதுவாக ஆரம்பித்த ஜெய்ஸ்வால், அடுத்து சுழற் பந்துவீச்சாளர்கள் வந்ததும் அடித்து நொறுக்கி 58 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது பேட்டிங் அணுகுமுறை குறித்து வெகுவாக சக மும்பை முன்னாள் வீரர் ஜாகீர் கான் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

ஜாகிர் கான் கூறும் பொழுது “ஜெய்ஸ்வாலுக்கு இருக்கும் ரன் பசியை நாம் பார்த்தோம். இது மிக நல்ல விஷயம் மேலும் பெரிய பேட்ஸ்மேன்கள் கூட நிறைய பேர் இவ்வளவு ரன்கள் ஒரு தொடரில் குவிக்கவில்லை. ஜெய்ஸ்வால் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரத்தில் இதை சாதித்து இருக்கிறார். எனவே இதை ஒரு பெரிய விஷயமாக உணர்கிறேன்.

ஜெய்ஸ்வால் இப்படி ஒரு அணுகுமுறையை பேட்டிங்கில் காட்டிய காரணத்தினால்தான் அவரிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஒரு சிறந்த பேட்டராக உருவாவதற்கான எல்லா திறமைகளையும் அவரிடம் பார்த்திருக்கிறோம். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் இவ்வளவு திறமையுடன் இருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல விஷயம். எனவே எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கிறது.

இதையும் படிங்க : “உங்களுக்கு எதிரே நிற்கிறாரே இவர்தான்” – படிக்கல்லுக்கு அஸ்வின் பேசிய வைரல் ஆகும் பேச்சு

அதே சமயத்தில் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங்கையும் பார்க்க வேண்டும். அவரும் இன்று தன்னுடைய ரிதத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஜெய்ஸ்வால் வேகப்பந்து வீச்சில் பொறுமை காட்டி ஸ்பின் வந்ததும் அடித்து விளையாடினார். நல்ல பார்மில் இருந்தால் கூட, நிலைத்து நின்று விளையாடுவதற்கு அவர் காட்டிய எச்சரிக்கை உணர்வு சிறப்பானது” என்று கூறியிருக்கிறார்.