“உங்களுக்கு எதிரே நிற்கிறாரே இவர்தான்” – படிக்கல்லுக்கு அஸ்வின் பேசிய வைரல் ஆகும் பேச்சு

0
738
Ashwin

மார்ச்-7. இன்று இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கிய ஐந்தாவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் தனது அஸ்வின் நூறாவது டெஸ்ட் போட்டியாக களம் இறங்கினார்.

மேலும் இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாட, கர்நாடகாவை சேர்ந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல் தன்னுடைய சர்வதேச முதல் டெஸ்ட் போட்டியை விளையாட இந்திய அணிக்காக அறிமுகமானார்.

- Advertisement -

கர்நாடக மாநிலத்திற்காக விளையாடி எல்லோரது கவனத்தையும் ஈர்த்த இவர், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்டு, மிகச் சிறப்பாக விளையாடி அறிமுகத் தொடரிலேயே சதமும் அடித்து அசத்தினார்.

மேலும் தொடர்ந்து சிகர் தவான் தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியில் இலங்கைக்கு எதிராக வெள்ளை பந்து தொடர்களில் இந்திய அணிக்காக அறிமுகமானார். பிறகு கொரோனா தொற்றாலும் காயத்தாலும் மெதுவாக பாதிக்கப்பட்டார்.

அதிலிருந்து மீண்டு வந்த இவர் கர்நாடக அணிக்காக இந்த முறை ரஞ்சி சீசனிலும், இந்திய ஏ அணிக்கும் மிகச் சிறப்பான முறையில் விளையாடி சதங்களை குவித்தார். இதன் காரணமாக கேஎல்.ராகுல் இடத்தில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. ரஜத் பட்டிதார் சரியாக விளையாடாததால் இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இவருக்கு இந்திய டெஸ்ட் தொப்பியை வழங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இளைஞராக டி20 கிரிக்கெட் வடிவில் வந்து மிகச் சிறப்பாக விளையாடிய எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார். தனது மாநில கிரிக்கெட்டின் நட்சத்திர இளைஞராக வெளிப்பட்டார். இளைஞர்கள் எப்போதும் காணக்கூடிய ஒன்றை அவர் வெகு எளிதாக கடந்து சென்றார்.

இப்படி எல்லோராலும் வெகு எளிதாக கடந்து செல்வது கடினம். பின்பு உடல் ரீதியாக பிரச்சனைகள் உருவானது. அவர் கிரிக்கெட் விளையாடுவாரா இல்லையா? என்பதே தெரியாமல் இருந்து வந்தது.ஆனால் வாழ்க்கை மிகவும் அன்பானது. நாம் அதை எதிர்த்துப் போராடி இருக்கலாம். ஆனால் அந்தத் தருணங்கள்தான் நமக்கு நிறையவற்றை கற்றுக் கொடுக்கிறது.

இதையும் படிங்க :எங்கள கட்டம் கட்டி முடிச்சது குல்தீப் இல்ல ரோகித்தான்.. என்னா மாதிரி கேப்டன்ஷிப்” – ஓவைஸ் ஷா பேட்டி

கர்நாடகா பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி இந்தியாவிற்கு கொடுத்துள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி ஒரு மனிதரான ராகுல் டிராவிட் உங்களுக்கு எதிரே நிற்கிறார். ஆனால் உங்களுக்கு சுமை கிடையாது. இன்று உங்கள் நாள், இதை நீங்கள் காத்து போற்றி, உங்களை வெளிப்படுத்துங்கள்” என்று கூறி இருக்கிறார்.