ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இந்திய சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திரா சஹால் விளையாட இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தான் பந்து வீசியதில் இரண்டு கடினமான பேட்ஸ்மேன்கள் குறித்து சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
பஞ்சாப் அணியில் சஹால்
இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக திகழ்ந்த யுஸ்வேந்திர சஹால் ஐபிஎல் தொடரில் தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி விளையாடி வருகிறார். தொடக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியவர், கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி முக்கிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சகால் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையாக நடைபெற்ற ஏலத்தில் இவரை இறுதியாக பஞ்சாப் அணி 18 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்த சூழ்நிலையில் தான் பந்து வீசுவதில் இரண்டு கடினமான பெயர்கள் குறித்து கேட்டதற்கு தென் ஆப்பிரிக்க அணியின் கிளாசன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் இருவரின் பெயர்களை குறிப்பிட்டு அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
அந்த இருவர் கடினமானவர்கள்
இதுகுறித்து சகால் விரிவாக கூறும்போது “கிளாசன் மற்றும் பூரன் ஆகியோரிடம் அதிக அளவு ஆற்றல் மற்றும் சக்தி இருக்கிறது. சில சமயங்களில் அவர்களது பேட்டின் விளிம்புகளில் பட்டு கூட பந்து சிக்ஸருக்கு செல்லும். அவர்கள் தான் எனக்கு மிகவும் சவாலானவர்கள். எனது பந்தில் அவர்கள் சிக்சர் அடித்தாலும் அதற்குப் பிறகு அவர்களுக்கு எதிராக நான் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். நான் பந்து வீசும் போது எப்போதுமே பெயர்களை பார்ப்பதில்லை.
இதையும் படிங்க:ரோகித் கேப்டனா அதுல சரி இல்லை.. இந்திய அணிக்கு சவாலே இனிமேதான் இருக்கு – கங்குலி எச்சரிக்கை
அவர்களது நற்பெயர்களை பார்க்கும்போது தேவையில்லாமல் அழுத்தம் உருவாகும். அவர்களிடம் பேட் இருக்கிறது, என்னிடம் பந்து இருக்கிறது. நான் போரில் வெற்றி பெற வேண்டும் என்கிற ரீதியில் தான் செயல்படுவேன். என் மனம் தான் எனக்கு எல்லாமே அதை நன்றாக வைத்துக்கொள்ள எப்போதுமே செயல்படுவேன். விக்கெட்டுகள் தட்டையாகவும், மட்டைகள் பெரிதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருப்பதால் மைதான பரிமாணங்கள் ஒரு காரணியாக இருக்கின்றன. நான் எட்டு வருடங்களாக சின்னசாமி மைதானத்தில் பந்து வீசி வருகிறேன். எனவே சிறிய மைதானம் குறித்த பயம் போய்விட்டது” என்று பேசி இருக்கிறார்.






