இந்திய அணி டி20 உலகக் கோப்பை துவக்க நாளான பிப்ரவரி 7ஆம் தேதி முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டிக்கான தனது இந்திய பிளேயிங் லெவலை யுஸ்வேந்திர சஹல் கூறியிருக்கிறார்.
ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பைத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இந்திய அணிக்கான சிக்கல்
தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் அபிஷேக் சர்மா இடம் உறுதியானதாக இருக்கிறது. அவருடன் இணைந்து விளையாடுவது சஞ்சு சாம்சானா இல்லை இஷான் கிஷானா? என்பதில் மட்டுமே குழப்பம் நிலவுகிறது. சஞ்சு சாம்சன் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்க இஷான் கிஷான் மிகவும் சிறப்பாக இருக்கிறார்.
இன்னொரு பக்கத்தில் இரண்டாவது சூழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் விளையாடுவதா இல்லை இரண்டாவது வேகப்பத்துவீச்சாளராக அர்ஸ்தீப் சிங் விளையாடுவதா? என்கின்ற சந்தேகமும் இருந்து வருகிறது. பெரும்பாலும் குல்தீப் யாதவ் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது.
கிஷான் விஷான் வேண்டாம்
இந்த நிலையில் இந்திய வீரர் யுஸ்வேந்திர சஹல் தான் அறிவித்திருப்போம் இந்திய பிளேயிங் லெவனில் இஷான் கிஷானை சேர்க்காமல் சஞ்சு சாம்சனை சேர்த்து இருக்கிறார். அதே சமயத்தில் தன்னுடைய ஸ்பின் கூட்டாளி குல்தீப் யாதவை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வயசெல்லாம் மேட்டரே கிடையாது.. விராட் ரோஹித் உலகக் கோப்பை ஏன் ஆடக்கூடாது? – தோனி சரமாரி கேள்வி
சஹல் ப்ளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.






