எங்க ஜோ ரூட், வீராட்டை விட.. இந்த இந்திய வீரர் தான் சிறந்தவர் – லெஜன்ட் பாய்காட் பாராட்டு

0
0

​இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் திறமை மற்றும் பேட்டிங், பௌலிங் பெர்ஃபார்மன்ஸ் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாஃப்ரி பாய்காட் பாராட்டி பேசியிருக்கிறார்.

​நவீன கிரிக்கெட்டின் ஃபேப் 4 பிளேயர்களான விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை விடவும் ரவீந்திர ஜடேஜா தான் தனக்கு மிகவும் பிடித்​தமான பிளேயர் என்று ஜாஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணியில் மூத்த வீரராக இருக்கும் ஜடேஜா, அனைத்து ஃபார்மட்டுகளிலும் தொடர்ந்து தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறார்.

​கடந்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்தபோது ஜடேஜாவை நேரில் சந்தித்த நிகழ்வையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். ஜடேஜாவின் அபாரமான ஃபீல்டிங் மற்றும் பொறுப்பான பேட்டிங் அப்ரோச் ஆகியவை உலக கிரிக்கெட்டில் அவரை ஒரு தனித்துவமான ஆல்-ரவுண்டராக மாற்றியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து ஜாஃப்ரி பாய்காட் பேசும்போது “ஜடேஜா மிகவும் அற்புதமாக பௌலிங் செய்கிறார், அவரின் ஃபீல்டிங் எலக்ட்ரிக் போல மிக வேகமாக இருக்கிறது, மேலும் பொறுப்புடன் பேட்டிங் செய்து ரன்களும் சேர்க்கிறார்.
​நான் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்தபோது அவரை நேரில் சந்தித்து நீங்கள்தான் எனது ஃபேவரிட் கிரிக்கெட்டர் என்று கூறினேன், அதைக்கேட்டு அவர் ஆச்சரியப்பட்டார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -