வயசெல்லாம் மேட்டரே கிடையாது.. விராட் ரோஹித் உலகக் கோப்பை ஏன் ஆடக்கூடாது? – தோனி சரமாரி கேள்வி

0
7
Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலந்துகொண்ட தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு அவர் தன்னுடைய பாணியில் மிகச் சிறப்பான பதில் அளித்திருக்கிறார்.

தற்போது வரையில் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு விராட் கோலியின் பெயர் மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் ரோகித் சர்மா பெயர் உறுதியாகாமலே இருந்து வருகிறது.

- Advertisement -

ஏன் ஆடக்கூடாது?

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள தோனி கூறும் பொழுது “அவர்கள் ஏன் இருவரும் அடுத்து விளையாட கூடாது? அவர்கள் தாராளமாக விளையாடலாம். இதில் விஷயம் என்னவென்றால் ஒருவர் உலகக் கோப்பை தொடரை வேண்டுமென்றால் வயது ஒரு பிரச்சனை கிடையாது. செயல்திறன் மற்றும் உடல் தகுதிதான் அவசியமானது”

“ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயம் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். நான் அணிக்குள் வந்த பொழுது எனக்கு 24 வயது. அப்போது என்னிடம் வந்து யாரும் எதுவும் சொல்லவில்லை. இதைத்தொடர்ந்து நான் இந்திய அணிக்கு ஐந்து வருடமோ அல்லது பத்து வருடமோ விளையாடினாலும் என்னிடம் யாரும் வந்து என் வயது குறித்து சொல்லக்கூடாது”

- Advertisement -

இதுதான் முக்கியம்

“இங்கு வயது என்பது ஒரு விஷயமே கிடையாது. உடல் தகுதிதான் மிகவும் முக்கியமானது. நீங்கள் 22 வயதில் இருந்தால் கூட உங்களுக்கு உடல் தகுதி இல்லை என்றால் நீங்கள் விளையாட முடியாது”

இதையும் படிங்க : காலி குடம் தான் அதிக சத்தம் போடும்.. தோல்வி பயத்துல பாகிஸ்தான் ஓடிடுச்சு – ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்

“ஒரு வீரர் 30 வயது கடந்துவிட்டார் என்பதற்காக மட்டுமே அவர் உலக கோப்பையில் விளையாடுவாரா இல்லையா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல் திறனோடு இருந்தால் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் ஏன் அவர்கள் தொடர்ந்து விளையாட கூடாது? இதெல்லாம் அவர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் நாம் செய்யக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -