வெளிநாட்டு தொடர்களில் அடைந்த தொடர் தோல்விகள் காரணமாக சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கடும் பிரஷரில் இருப்பது மற்றும் பிசிசிஐ ரிவ்யூ மீட்டிங் நடத்தவுள்ளது.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சந்தித்த தோல்விகளைத் தொடர்ந்து பிசிசிஐ அதிகாரிகள், ஹெட் கோச் கௌதம் கம்பீர், சீஃப் செலக்டர் அஜித் அகர்கர் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் பங்கேற்கும் முக்கிய மீட்டிங் மும்பையில் நடைபெறவுள்ளது.
இந்த மீட்டிங்கில் கேப்டன்கள் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். 2027 ஓடிஐ வேர்ல்ட் கப் தொடரை மனதில் கொண்டு பிளேயர்களின் ஃபிட்னஸ், இன்ஜுரி மேனேஜ்மென்ட் மற்றும் அடுத்தகட்ட சீரிஸ் குறித்தும் இந்த மீட்டிங்கில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்த தொடர் தோல்விகளால் அணி மேனேஜ்மென்ட் மற்றும் கேப்டன்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசும்போது “இந்திய அணியின் சமீபத்திய வெளிநாட்டு பெர்ஃபார்மன்ஸ் திருப்திகரமாக இல்லை, எனவே அணியின் பிளானிங் குறித்து உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.
செலக்டர்ஸ், கோச்சிங் ஸ்டாஃப் மற்றும் பிளேயர்கள் இடையே சரியான கோஆர்டினேஷன் இருந்தால் மட்டுமே வரவிருக்கும் முக்கிய தொடர்களில் வெற்றி பெற முடியும்” என்று கூறி இருக்கிறார்.






