விராட் கோலி கிரிக்கெட்டை விட பெரிய ஆள் கிடையாது.. இத செய்ய கூட ஆள் வேணும் – யுவராஜ் சிங் தந்தை கருத்து

0
476
Yograj

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் மிகவும் மோசமான முறையில் ஆட்டம் இழந்த விராட் கோலி குறித்து யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி எட்டு முறை ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தை விளையாடி ஆட்டம் இழந்து இருக்கிறார். உலக கிரிக்கெட்டில் ஒரு பலவீனத்தில் தொடர்ந்து எத்தனை முறை ஆட்டம் இழந்த ஒரே வீரராக விராட் கோலி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மனித மேலாண்மைக்கு ஆள் வேண்டும்

இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரரும் யுவராஜ் சிங் தந்தையுமான யோக்ராஜ் சிங் இந்தியா மாதிரியான பெரிய அணியில் பயிற்சியாளர் பொறுப்புக்கு ஆள் தேவை என்பதை விட, வீரர்களை மேலாண்மை செய்வதற்கு சரியான ஆள் தேவை என்று கூறி இருக்கிறார். மேலும் விராட் கோலி ஆக இருந்தாலும் கிரிக்கெட்டை விட பெரியவராக மாறிவிட முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இத்துடன் ஆஸ்திரேலிய தொடரில் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் ஐந்தாவது போட்டியில் விளையாடாத கேப்டன் ரோஹித் சர்மா குறித்தும் அவர் வெளிப்படையான கருத்துக்களை பேசி இருக்கிறார். இவர்களுடன் சரியான ஒரு ஆள் இருந்து இவர்களை வழி நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டை விட பெரிய ஆள் இல்லை

இது குறித்து யோக்ராஜ் சிங் கூறும் பொழுது ” நீங்கள் இந்தியாவுக்காக விளையாடும் பொழுது ஒரு பயிற்சியாளரின் பங்கு எந்த அளவுக்கு முக்கியம்? என்பது கேள்வியாகிறது. நீங்கள் இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கும் பொழுது உங்களுக்கு பாரம்பரியமான பயிற்சிகள் தேவை இல்லாமல் போகிறது. உங்களுக்கு உண்மையில் தேவைப்படுவது மேன் மேனேஜ்மென்ட் செய்யக்கூடிய ஆட்கள்தான். சில நேரங்களில் வீரர்களின் மனம் பாதிக்கப்படும். அப்பொழுது இப்படியான ஆட்கள் தேவை. எப்படி இருந்தாலும் போட்டியை விட விராட் கோலி பெரிய ஆளாக இருக்க முடியாது”

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியை ஜெயிச்சி தோல்வியை மறைச்சிடுவாங்க.. முதல்ல இந்தியாவில் இதை செய்யுங்க – முகமது கைஃப் பேட்டி

“தற்போது இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு வலையில் சென்று பயிற்சிகள் செய்து சரி செய்யலாம் என்று கூறுவதற்கு உடன் சரியான நபர் இருக்க வேண்டும். விராட் கோலி தனக்கு பிடித்தமான ஷாட்டை விளையாடி பலமுறை ஆட்டம் இழந்தார். அது இந்தியாவில் விளையாடுவதற்கு எளிதாக இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் பவுன்ஸ் அதிகம் என்பதால் விளையாட முடியாது. இந்தப் பந்தை நேராக விளையாடுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் என்று கூறுவதற்கு ஆள் வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -