யாரும் எதிர்பார்க்காத அதிரடி காட்டிய இந்தியா.. வினோதமாக விளையாடிய விதி.. தொடர் சமனில் முடிந்தது

0
0

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி மழையின் காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டிருக்கிறது.

இந்த போட்டியில் மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி 9 ஓவர்கள் கொண்டதாக நடக்கும் என அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 4 பந்துகளில் 6 ரன்கள் சஞ்சு, சாம்சன் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அடுத்து வந்த இசான் கிஷான் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

இவரைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 14 பந்துகளில் 22 ரன்கள், திலக் வர்மா 6 பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்தார்கள். நமன் திர் அதிரடியாக விளையாடி 6 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். இந்திய அணி 7.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது.

- Advertisement -

மேலும் மழை தொடர்ந்து வலுவாக பெய்த காரணத்தினால் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என சமநிலையில் முடிந்திருக்கிறது.

- Advertisement -