பாகிஸ்தான் அணியை ஜெயிச்சி தோல்வியை மறைச்சிடுவாங்க.. முதல்ல இந்தியாவில் இதை செய்யுங்க – முகமது கைஃப் பேட்டி

0
122
Kaif

இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக இருப்பதால் மட்டும் பயன் கிடையாது என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றுக்கு ஒன்று எனப் படுதோல்வி அடைந்திருக்கிறது. ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல், நிதீஷ்குமார் ரெட்டி தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஏமாற்றம் தந்திருக்கிறார்கள். இதன் காரணமாக இந்திய அணி மீது நிறைய விமர்சனங்கள் இருக்கிறது.

- Advertisement -

ஒயிட் பால் கிரிக்கெட் புல்லிஸ்

இந்திய அணி தற்பொழுது டி20 கிரிக்கெட் உலகச் சாம்பியன் ஆக இருந்து வருகிறது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் நல்ல வலிமையான அணி கிடைத்திருக்கிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சு என இரண்டுக்கும் திடீரென தடுமாற ஆரம்பித்திருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் நம்பிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது.

இந்த வகையில் இந்திய அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் அணியாகவும், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் மிகவும் சுமாரான அணியாகவும் மாறி வருவதாக முகமது கைஃப் விமர்சனம் செய்திருக்கிறார். இதன் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட்டில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தானை வென்றால் போதாது

இது குறித்து முகமது கைஃப் கூறும் பொழுது ” பிப்ரவரி 23ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை தோற்கடிப்பதன் மூலமாக இந்திய அணி நிறைய பாராட்டுகளை இந்தியா முழுவதிலிருந்தும் பெறும். மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு சாம்பியன் அணி என எல்லோரும் சொல்வார்கள்”

இதையும் படிங்க : தங்களை வீழ்த்தவே முடியாதுனு சிலர் இருக்காங்க.. கம்பீர் சொன்னது நடக்குதான்னு பார்க்கிறேன் – கவாஸ்கர் கருத்து

“அதே சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாம்பியன் ஆக வேண்டும் என்றால், நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் சீமிங் ட்ராக்குகளில் விளையாட வேண்டும். மேலும் டர்னிங் டிராக்குகளிலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து உரையாட வேண்டும். தொடர்ந்து நாங்கள் இதை உள்நாட்டு கிரிக்கெட்டில் செய்யவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகச் சாம்பியன் ஆக முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -