நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் ஸ்குவாடில் சீனியர் ஃபாஸ்ட் பௌலர் முகமது ஷமி சேர்க்கப்படாத நிலையிலும், அவருக்கான வாய்ப்பு கதவுகள் இன்னும் மூடப்படவில்லை என்று இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “அவர் ஃபிட்டாக இருந்து சிறப்பாக பெர்ஃபார்ம் செய்தால், அவருக்கான கதவு மூடப்படவில்லை என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். இருப்பினும், தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் மிகச் சிறப்பாக பௌலிங் செய்து வருகிறார்கள்”
“எனவே வாய்ப்பு பெற்ற வீரர்கள் அதற்கு தகுதியானவர்களே. முகமது ஷமி வரிசையில் காத்திருக்க வேண்டும், ஆனால் தேர்வாளர்களின் முடிவுகளைப் பார்க்கும்போது முகமது ஷமிக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பது போலத் தெரிகிறது. டெல்லி மற்றும் பெங்கால் மோதிய ரஞ்சி டிராபி போட்டியை நான் பார்த்தேன், அதில் அவர் வேக பௌலிங் செய்ய விரும்பிய போதெல்லாம் சிறப்பாக பௌலிங் செய்தார். முகமது ஷமி போன்ற ஒரு திறமையான பிளேயர் மீண்டும் கம்பேக் கொடுக்க முயற்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, இது பெங்கால் பிளேயர்களுக்கும் ஒரு நல்ல லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது, ஒயிட் பால் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் படேல் சற்று முன்னணியில் இருக்கிறார். தேர்வாளர்களும் டீம் மேனேஜ்மென்ட்டும் ரவீந்திர ஜடேஜாவுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியுள்ளனர், ஆனால் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டராக அக்சர் படேல் முன்னணியில் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். எனவே தற்போதைய நிலையில் ஒருநாள் வேர்ல்ட் கப் தொடருக்கு ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டராக அக்சர் படேல் முதன்மை தேர்வாக இருப்பார் என்று நான் கருதுகிறேன்” என்று கூறி இருக்கிறார்.






