ரோகித் கோலி இல்லை.. இவர்தான் இந்தியாவுக்கு டி20 உலக கோப்பை வாங்கி தருவார் – யுவராஜ் சிங் பேட்டி

0
71
Yuvraj

டி20 உலகக்கோப்பை தொடருக்கான நாட்கள் குறைவாக இருப்பதால், அது குறித்தான பேச்சு வார்த்தைகள் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் யார் விளையாட வேண்டும்? என யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது யுவராஜ் சிங் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அடையாள வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவர் அமைய இருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணி குறித்து பேசும் பொழுது, தற்பொழுதும் எதிர்காலத்திலும் இந்திய டி20 கிரிக்கெட் அணி எவ்வாறு அமைய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது வயதானவர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்களின் வயதைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த வீரர்களின் ஃபார்ம் பற்றி மறந்து விடுகிறார்கள். இவர்கள் இந்திய அணிக்காக மிகவும் சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறார்கள். இவர்கள் விரும்பும் பொழுது ஓய்வு பெறுவதற்கு தகுதியான வீரர்கள்.

நான் அதிக இளம் வீரர்களை டி20 வடிவத்தில் இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால் இங்கிருந்து கிடைக்கும் அனுபவம் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு எங்காவது உதவி செய்யும். மேலும் அடுத்தடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு வசதியாக இருக்கும்.

தற்போது டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரர் சூரியகுமார் யாதவ். அவர் 15 பந்துகள் மட்டும் சந்தித்தாலே ஆட்டத்தின் போக்கை மாற்றி விடக் கூடியவர். இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல, இவர்தான் அதிக உறுதியை கொடுக்கக் கூடியவர். அதேபோல் பந்துவீச்சில் பும்ரா மிகவும் முக்கியமானவராக இருப்பார். மேலும் அவருடன் சுழல் பந்துவீச்சாளர் சாகல் இருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் ஆடுகளங்கள் ஏன் சுமாரா இருக்கு?.. ஆனால் ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேற மாதிரி – டெவோன் கான்வே பேட்டி

விக்கெட் கீப்பர்கள் யார் என்று கேட்டால் கடந்த முறை தினேஷ் கார்த்திக் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் அதில் சரியாக விளையாடவில்லை. தற்பொழுது என்னை பொருத்தவரை விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் சரியானவர்களாக இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.