ஐபிஎல் ஆடுகளங்கள் ஏன் சுமாரா இருக்கு?.. ஆனால் ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேற மாதிரி – டெவோன் கான்வே பேட்டி

0
184
Conway

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு துவக்கம் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் காயமடைந்திருக்கும் சிஎஸ்கே துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே ஐபிஎல் தொடர் குறித்து சில முக்கியமான விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரர் நியூசிலாந்தை சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் டெவோன் கான்வே காலில் காயமடைந்த காரணத்தினால் ரூல்டு அவுட் ஆனார். ஆனால் அவருடைய இடத்திற்கு நியூசிலாந்தின் இன்னும் ஒரு துவக்க இடதுகை பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திர சிஎஸ்கே அணியில் இடம் பெற்றார்.

- Advertisement -

ஆனாலும் கூட கான்வே துவக்க இடத்தில் சிஎஸ்கே அனுப்பி கொடுத்த தாக்கத்தை ரச்சின் ரவீந்திராவால் கொடுக்க முடியவில்லை.இதன் காரணமாக கடந்த போட்டியில் அவர் நீக்கப்பட்டு, துவக்க ஆட்டக்காரர்களாக இந்திய வீரர்கள் ரகானே மற்றும் ருதுராஜ் இருவரும் சிஎஸ்கே அணிக்கு ஆட்டத்தை தொடங்கினார்கள்.

இந்த நிலையில் ஒரு புதிய திருப்பமாக காயமடைந்து ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிய காண்பி சிஎஸ்கே அணிக்கு திரும்பி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் முஸ்தபிஷூர் ரஹமான் பாதியிலேயே நாடு திரும்பும் பொழுது, அவருடைய இடத்திற்கு கான்வே மீண்டும் வர முடியுமா? என்பது குறித்து தெரியவில்லை.

தற்போது ஐபிஎல் தொடர் குறித்து கான்வே பேசும் பொழுது ” ஐபிஎல் தொடரில் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் வீசலாம் என்று கொண்டுவரப்பட்ட புதிய விதி மிகவும் மதிப்பு மிக்கதாகும். இதன் காரணமாக பந்துவீச்சாளர் அடுத்து என்ன பந்தை வீசுவார் என்ற யூகத்தை பேட்ஸ்மேனுக்கு ஏற்படுத்த முடிகிறது. இதன் மூலம் பேட்ஸ்மேனை சந்தேகத்தில் வைத்து விக்கெட்டை கைப்பற்ற முடியும். இந்த விதி என்ன மாதிரியான தாக்கத்தை கொடுக்கிறது என்று ஐபிஎல் தொடரில் நாம் பார்த்து வருகிறோம். ஐபிஎல் தொடரில் செயல்படுத்த முடிந்த இந்த விதியை சர்வதேச டி20 போட்டியிலும் செயல்படுத்த ஏன் முடியவில்லை என்று புரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்கலனாலும்.. இந்திய அணிக்காக இதை செய்வேன் – சுப்மன் கில் பேட்டி

ஐபிஎல் மாதிரியான லீக் போட்டிகளில் சில சமயங்களில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்கள் உருவாக்கப்பட்டு விளையாடப்படுகிறது. எதிரணியை விட ஏதாவது ஒரு விதத்தில் மிஞ்சி இருப்பதற்காக இப்படி செய்யப்படுகிறது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பையில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்பட்டது. எனவே இது குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை” என்று கூறி இருக்கிறார்.