இந்திய கிரிக்கெட்

அபிஷேக் சர்மா கிட்ட அதை மட்டும் யாராலும் செய்ய முடியாது.. பொய் சொல்லுவான் சண்டை போடுவான் – பேச்சு

தற்போது இந்திய டி20 அணியின் மிகப்பெரிய நட்சத்திர வீரராக உருவெடுத்திருக்கும் தன்னுடைய சிஷ்யன் அபிஷேக் ஷர்மா குறித்து யுவராஜ் சிங் சுவாரசியமான விஷயம் ஒன்றை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் ஷர்மா தொடர் நாயகன் விருதை வென்றார். அவருக்கு இதுவே முதல் முறையாக சர்வதேச ஆஸ்திரேலியா கிரிக்கெட் சுற்றுப்பயணமாக இருந்தது.

அசைக்க முடியாத இடம்

இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக்குழு சுப்மன் கில்லை மூன்று வடிவத்திற்கும் கேப்டனாக கொண்டுவர முடிவு செய்த பிறகு, இந்திய டி20 அணியில் துவக்க இடத்திற்கு அவருடன் விளையாடப் போவது ஜெய்ஸ்வாலா இல்லை அபிஷேக் ஷர்மாவா என்கின்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் முதல் வாய்ப்பு இங்கிலாந்து தொடரில் அபிஷேக் சர்மாவுக்கு கொடுக்கப்பட்டது. இந்த தொடரின் கடைசி போட்டியில் அவர் அதிரடியாக அடித்த சதம் அவரது இடத்தை அசைக்க முடியாமல் செய்துவிட்டது. அடுத்து நடக்க உள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதியான விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

அபிஷேக் ஷர்மா அழுவார்

இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா எப்பொழுதும் தான் வைத்திருக்கும் பேட்டை மட்டும் யாருக்கும் தர மாட்டார் எனவும், அது குறித்து எப்பொழுதும் பொய் மட்டுமே சொல்லுவார் எனவும், மேலும் யாராவது எடுத்துக் கொண்டால் அழவும் செய்வார் எனவும் யுவராஜ் சிங் சுவாரசியமான தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய பெண்கள் அணி வெற்றி.. வெட்கங்கெட்டவர்கள் உங்கள பயன்படுத்துறாங்க.. எச்சரிக்கையா இருங்க – கவாஸ்கர் அறிவுரை

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது ” நீங்கள் அபிஷேக் ஷர்மாவிடமிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் அவருடைய பேட்டை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி நீங்கள் எடுத்தால் அவன் சண்டையிடுவான், அழுவான், ஆனால் தன்னுடைய பேட்டை விட்டு தரமாட்டான். அவனிடம் 10 பேட் இருந்தாலும் 2 மட்டுமே இருப்பதாக சொல்லுவான். அவன் என்னிடமிருந்து நிறைய எடுத்துக் கொண்டான், ஆனால் தன்னுடைய சொந்த பேட்டை மட்டும் யாருக்குமே தர மாட்டான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by