ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 சீரிஸ் போட்டிக்கான இந்திய டீமின் பிளேயிங் லெவனில் ஓபனிங் பேட்டர்களை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய மூவரில் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முடிவு செய்யவில்லை.
சமீபத்தில் நடந்த ஜிம்பாப்வே சீரிஸ் போட்டியில் இளம் வீரர் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடி பிளேயர் ஆஃப் தி சீரிஸ் விருதை வென்றார். அதே நேரத்தில் டி20 வேர்ல்ட் கப் தொடரில் சஞ்சு சாம்சன் மேட்ச் வின்னராக செயல்பட்டு பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் மேட்ச்சில் பிளேயிங் லெவன் தேர்வு குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “இந்த மூவரும் டீமில் இருப்பது மிகப்பெரிய லக்ஸரி மற்றும் அவர்கள் தங்களது டிபார்ட்மென்ட்டில் மிகவும் ஃப்ளாலெஸ்ஸாக இருக்கிறார்கள். மூவரும் தொடர்ந்து சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து வருவதால் இவர்களில் இருவரை தேர்வு செய்வது கடினமான ஒரு முடிவாக இருக்கும். டீமின் நன்மைக்காகவே இந்த முடிவு எடுக்கப்படும்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் “வெளியே உட்கார வைக்கப்படும் பிளேயரிடம் நானோ அல்லது ஹெட் கோச் கௌதம் கம்பீரோ பேசி அவர்களுக்கு தேவையான கான்ஃபிடன்ஸ் கொடுப்பது மிகவும் முக்கியம். எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கான வாய்ப்பு வரும் நாளில் கண்டிப்பதாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிப்போம்” என்று தெரிவித்து இருக்கிறார்.