கிரிக்கெட் உலகின் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்த சுவாரஸ்யமான கேமில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஹெட் கோச் ராகுல் டிராவிட் தனது தேர்வை அறிவித்து இருக்கிறார்.
ஸ்டீவ் ஸ்மித், ரிக்கி பாண்டிங், விராட் கோலி மற்றும் இம்ரான் கான் போன்ற உலகின் முன்னணி கேப்டன்களை ஒப்பிட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டிராவிட் மிகச் சுவாரஸ்யமாக பதிலளித்தார்.
இதில் விராட் கோலியை விட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானை டிராவிட் தேர்வு செய்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
இறுதியில் இம்ரான் கான் மற்றும் க்ளைவ் லாயிட் ஆகியோரை விட எம்எஸ் தோனியே சிறந்த கேப்டன் என்று ராகுல் டிராவிட் தேர்வு செய்து முடித்தார்.
இதன் மூலம் உலகக்கோப்பை வென்ற சிறந்த கேப்டன்களின் பட்டியலில் தோனிக்கு முதலிடம் வழங்கி டிராவிட் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து விராட் கோலியை விட்டுவிட்டு இம்ரான் கானை தேர்வு செய்தது பற்றி ராகுல் டிராவிட் பேசும்போது “அவர் செய்த சாதனைகளுக்காக இம்ரான் கானை தேர்வு செய்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.