இந்திய பெண்கள் அணியின் வெற்றியை சிலர் மோசமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என கவாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
கடந்த வாரத்தில் இந்திய பெண்கள் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முதல் முறையாக வென்றது. ஐ பி சி பரிசுத்தொகை 40 கோடி, பிசிசிஐ பரிசுத்தொகை 51 கோடி, மேலும் சில மாநில அரசுகள் வழங்கிய பரிசுத்தொகைகள் என வீராங்கனைகளுக்கு பல பக்கத்தில் இருந்து ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் கிடைத்தது.
வெட்கம் கெட்டவர்கள் பயன்படுத்துகிறார்கள்
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது ” நமது பெண் வீராங்கனைகளுக்கு நான் ஒரு எச்சரிக்கை செய்கிறேன் உங்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட சில விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம். தற்போது இந்தியாவில் தனி மனிதர்கள், பிராண்டுகள் மற்றும் ஸ்பான்சர்கள் இந்திய பெண்கள் அணியின் தோள் மேல் ஏறி விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்”
“இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக வெட்கமே இல்லாமல் இப்படியான வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். தனிப்பட்ட வீராங்கனைகளுக்கான ஸ்பான்ஸர்கள் இதைச் செய்யலாம். ஆனால் அப்படி இல்லாமல் மேலும் பலரும் களத்தில் குதித்து பெண்கள் அணியை வைத்து தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்”
எங்களுக்கும் இது நடந்தது
“1983 ஆம் ஆண்டு நாங்கள் உலகக் கோப்பையை வென்ற பொழுதும், எங்களுக்கு பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. அது பத்திரிக்கையில் பெருமையாக வெளியிடப்பட்டது. ஆனால் எங்களுக்கு எதுவுமே கடைசி வரை கொடுக்கப்படவில்லை. செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகள் இந்த வெட்கம் கெட்டவர்கள் இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை கடைசி வரை உணரவே இல்லை. இதே போல பெண்களே உங்களுடைய வெற்றியையும் இந்த வெட்கம் கெட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறார்கள். இது குறித்து கவலைப்பட வேண்டாம்”
இதையும் படிங்க : ஜடேஜாவை விட்டுக் கொடுத்து சாம்சனை வாங்கியது.. இது முழுக்க தோனியின் வேலைதான் – முகமது கைப் பேச்சு
” 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற வீரர்கள் உங்களுக்கு சொல்வார்கள். எளிய கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவும் அன்பும் தான் எப்பொழுதும் எங்களுக்கு நிரந்தரமாக இருந்தது. நீங்கள் மேலே வரும் பொழுது உங்களுக்கும் அதுவே எப்பொழுதும் பின்னணியில் நிரந்தரமாக இருக்கும். தேசம் உங்களை குறித்து பெருமை கொள்கிறது” என்று கூறி இருக்கிறார்.






