இந்திய கிரிக்கெட்

3-0.. பாகிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து.. வொயிட் வாஷ் அவமானம்.. சுவாரசியமின்றி முடிந்த தொடர்

​இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

​இந்த போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தான் அணியை “ஒயிட்வாஷ்” செய்துள்ளது. பாகிஸ்தான் அணி இந்த டெஸ்ட் தொடரை 3-0 என இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது.

​இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 133 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 453 ரன்கள் குவித்தது.
​இதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 449 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணிக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

​இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 130 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. இதில் ஜோ ரூட் மற்றும் ஜோர்டான் காக்ஸ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -
- Advertisement -
Published by

Recent Posts