கோலி சாம்சன் சரிவராது.. ஐபிஎல்ல பார்த்தா இவங்க இந்திய டீம்லயே இருக்க மாட்டாங்க – யுவராஜ் சிங் பேட்டி

0
620
Yuvraj

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 17வது ஐபிஎல் சீசன் மே மாதம் 26ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் முதல் தேதியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடக்கிறது. இதில் இந்திய அணி குறித்து இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் சீசன் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மே மாத இறுதியில் டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மேலும் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருக்கிறார்கள். விராட் கோலியும் துவக்க வீரராக வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

15 பேர் கொண்ட அணி இல்லாமல் கில் ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஸ் கான் ஆகிய நான்கு வீரர்கள் ரிசர்வ் வீரர்களாக உலகக் கோப்பைக்கு செல்லும் இந்திய அணி உடன் பயணிக்கிறார்கள். நான்கு ஸ்பின்னர்கள் இடம் பெற்று இருக்கும் நிலையில் அதில் ஒருவரை குறைத்து ரிஙகு சிங் அணியில் இடம் பெற்று இருக்கலாம் என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது. மற்றபடி பெரிய குறைகள் இல்லை. விராட் கோலி துவக்க வீரராக வரலாம் என்ற பேச்சு இருக்கும்பொழுது யுவராஜ் சிங் அதை மறுத்திருக்கிறார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறும் பொழுது ” ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் கண்டிப்பாக துவக்க வீரர்களாக வர வேண்டும். விராட் கோலி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார், அவருக்கு அதுதான் சரியான இடம். இதற்கடுத்து சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்தில் வந்து விடுவார்.

இதைத் தொடர்ந்து நமக்கு இடதுகை மற்றும் வலதுகை காம்பினேஷன் தேவை. எனவே ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக, பேட்ஸ்மேனாக இடம் பெற வேண்டும்.மேலும் இந்திய அணிக்காக கேம்களை வெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவராக ரிஷப் பண்ட் இருந்திருக்கிறார். அவர் அதைக் கடந்த காலத்திலும் செய்து காட்டி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கம்மின்ஸ் இவ்வளவு கோழைத்தனமா இருக்க கூடாது.. ஆர்சிபி செஞ்ச அதே தப்பு – நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம்

தற்பொழுது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் நல்ல விஷயம் என்னவென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்று பார்த்திருக்கிறார்கள். ஐபிஎல் தொடரை வைத்து பார்க்கவில்லை. அப்படி பார்த்தால் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்திருக்க மாட்டார். அவர் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். மேலும் அவருடைய உடல் தகுதி முக்கியமான ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.