6,6,6,6,6.. 9 ஓவரில் மேட்சை முடித்த பட்லர்.. இங்கிலாந்து செமி பைனலுக்கு தகுதி.. வெ.இ தெ.ஆ யாருக்கு அரையிறுதி வாய்ப்பு?

0
385
Buttler

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று பார்படாஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்கா நிர்ணயத்தை இலக்கை வெறும் ஒன்பது ஓவர்களில் எட்டி, இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தங்கள் அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். சூப்பர் எட்டு சுற்றில் மிகவும் தடுமாறி வரும் அமெரிக்க அணிக்கு இந்த முறை பேட்டிங்கில் நிதீஷ் குமார் 24 பந்தில் 30 ரன், கோரி ஆண்டர்சன் 28 பந்தில் 29 ரன், ஹர்மீத் சிங் 17 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

அமெரிக்க அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் ஜோர்டான் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆதில் ரஷீத் மற்றும் சாம் கரன் இருவரும் தல இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து 18.4 ஓவரில் இலக்கை எட்டினால் தென் ஆப்பிரிக்கா அணியை விடவும், 10.2 ஓவரில் இலக்கை எட்டினால் வெஸ்ட் இண்டீஸ் அணியை விடவும் ரன் ரேட்டில் முன்பு செல்லலாம் என்கின்ற நிலையில் இங்கிலாந்து அணிக்கு துவக்கம் தருவதற்கு ஜோஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் இருவரும் வந்தார்கள்.

இந்த முறை அதிரடி வீரர் பில் சால்ட் அடக்கி வாசிக்க, இன்னொரு முனையில் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியில் மிரட்டினார். ஹர்மீத் சிங் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் பறக்க விட்டார். ஜோஸ் பட்லர் 38 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 83* ரன்கள், பில் சால்ட் 21 பந்தில் 25 ரன்கள் எடுக்க, 9.4 ஓவரில் இலக்கை எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : W,W,0,W,W,W.. 6 பந்தில் 5 விக்கெட்.. ஜோர்டான் ஹாட்ரிக் உடன் 3 சாதனைகள்.. அமெரிக்க அணியை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து

இந்த வெற்றியின் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியை விட ரன் ரேட் அதிகம் பெற்று, நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக இங்கிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அமெரிக்கா, சூப்பர் 8 சுற்றில் மூன்று போட்டிகளையும் தோற்று வெளியேறி இருக்கிறது. மேலும் இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில், யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் இரண்டாவது பிரிவில் இருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.