என்னுடைய கோச்சிங் ஸ்டைல் இவர் மாதிரிதான்.. பணம் இல்லாதப்ப நிறைய உதவினார் – யுவராஜ் சிங் வெளியிட்ட தகவல்

0
16
Yuvraj

தற்போது இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வழிகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் இளம் வீரர்களுக்கு நிறைய செய்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய பயிற்சியாளர் அணுகுமுறையில் ஒரு குறிப்பிட்ட இந்திய முன்னாள் வீரரின் பயிற்சியாளர் அணுகுமுறை தாக்கத்தை ஏற்படுத்த இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனியை தலைமையில் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகியவற்றை வென்றதில் யுவராஜ் சிங்கின் பங்கு மிகப் பெரிய அளவில் இருக்கும். இந்த வகையில் பெரிய தொடர்களில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கடினமான மனநிலையை வைத்திருந்தவர்.

- Advertisement -

சுப்மன் கில் – அபிஷேக் ஷர்மா

சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவருடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு இருக்கிறது. குறிப்பாக அபிஷேக் ஷர்மாவை பட்டை தீட்டியவராக யுவராஜ் சிங் இருக்கிறார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அபிஷேக் சர்மா பந்துவீச்சாளர்கள் பயம் கொள்ளும் அளவுக்கு பேட்ஸ்மேன் ஆக உருவானதில் பயிற்சியாளரான யுவராஜ் சிங் முக்கியமானவர்.

மேலும் ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக வருவதற்கு யுவராஜ் சிங் விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த முறை எந்த அணியும் அவரை பயிற்சியாளராகவோ அல்லது வழிகாட்டியாகவோ அணிக்குள் கொண்டு வரவில்லை. ஆனால் நிச்சயம் எதிர்காலத்தில் ஏதாவது ஒரு அணி நிர்வாகம் அவரை பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வரலாம்.

- Advertisement -

பிசன் சிங் பேடி முக்கியமானவர்

இந்த நிலையில் மறைந்த முன்னாள் இந்திய வீரர் மற்றும் பயிற்சியாளர் பிசன் சிங் பேடி குறித்து பேசிய யுவராஜ் சிங் “நான் மக்களிடமிருந்து கற்றுக் கொண்ட எல்லா விஷயங்களையும் வாழ்க்கைக்கும் சரி, பயிற்சிக்கும் சரி பயன்படுத்த விரும்புகிறேன். எனக்கு பிசன் சிங் பேடி ஸார் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். நான் அதைத்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் தற்போது ஓய்வு பெற்ற ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதால், கிரிக்கெட் நிறைய மாறி இருக்கிறது. நாம் இதற்கு சரியாக மாறிக்கொள்ள வேண்டும்.

நாங்கஇதையும் படிங்க : நாங்க 2 பேர் தோனி கிட்ட.. கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கி இருக்கோம்.. காரணம் இதுதான் – மோகித் சர்மா பேட்டி

“பேடி சார் எனக்கு நிறைய பக்க பலமாக இருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் சில பணப் பிரச்சனைகள் இருந்த சூழ்நிலையில் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் என்னை பயிற்சியில் ஈடுபட ஊக்குவித்தார். என் அப்பாவுடன் இணைந்து கடின உழைப்பின் மதிப்பை எனக்கு புரிய வைத்தார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -