நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் வரவிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஃபாஸ்ட் பௌலர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பணிச்சுமை மேலாண்மை குறித்து முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20ஐ, ஐந்து ஓடிஐ மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் முதல் 10 வொயிட் பால் போட்டிகளில் இருந்து பும்ராவிற்கு ரெஸ்ட் அளிக்கப்பட்டு, இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் எதிர்காலம் மற்றும் பும்ராவின் பணிச்சுமையை கையாள்வது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, நியூசிலாந்து மண்ணில் நடக்கும் இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது என்றும், அங்குள்ள கண்டிஷன்கள் உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு நல்ல அனுபவத்தை தரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜஸ்ப்ரீத் பும்ராவின் சர்வதேச எதிர்காலம் மற்றும் பணிச்சுமை குறித்து ரவி சாஸ்திரி பேசும்போது “வேர்ல்ட் கப் வரை அவர் மூன்று ஃபார்மட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர் முதன்மையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிகளில் அரிதாக மட்டுமே தோன்ற வேண்டும். நியூசிலாந்தில் நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அவரை பாதுகாப்பதே சிறந்தது, அங்கு அவர் மிகவும் முக்கியமானவராக இருப்பார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும், நியூசிலாந்து தொடரின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி “இந்த முழு சுற்றுப்பயணமும் மிக முக்கியமானது. இந்திய கிரிக்கெட் எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்பதை இது தெளிவாக உணர்த்தும். அங்குள்ள கண்டிஷன்கள், வேர்ல்ட் கப் தொடரின் போது தென்னாப்பிரிக்காவில் இந்தியா எதிர்கொள்ளக்கூடிய சில சூழல்களைப் போலவே பிரதிபலிக்கும்” என்று கூறி இருக்கிறார்.






