நாங்க 2 பேர் தோனி கிட்ட.. கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கி இருக்கோம்.. காரணம் இதுதான் – மோகித் சர்மா பேட்டி

0
123
Mohit

இந்திய வீரரும் தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா களத்தில் மகேந்திர சிங் தோனி கோபப்பட்ட தருணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக மகேந்திர சிங் தோனி மிகவும் இயல்பாக அமைதியாக இருப்பதற்காக உலகெங்கும் அறியப்படக்கூடியவர். அப்படிப்பட்டவர் ஒரு சில விஷயத்திற்காக மட்டும் கடுமையாக கோபப்படக்கூடியவராக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவரிடம் இருந்து தடித்த வார்த்தைகள் வந்திருக்கிறது. இதுகுறித்து மோகித் சர்மா தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

மோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த தோனி

மோகித் சர்மா இந்திய அணிக்குள் வருவதற்கு முக்கிய காரணமாக மகேந்திர சிங் தோனி இருந்தார். மோகித் சர்மா ஐபிஎல் தொடரில் தோனி தலைமையின் கீழ் விளையாட அங்கிருந்து இந்திய அணிக்குள்ளும் அவரைக் கொண்டு வந்து விளையாட வைத்தார்.

பிறகு மோகித் சர்மா பவுலிங் ஃபார்மை இழக்க தோனியும் கேப்டன் பொறுப்பில் இருந்து நகர இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்து, அங்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் நெக்ரா ஆகியோரை கவர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்குள் நுழைந்து சாதித்தார்.

- Advertisement -

தோனி அப்யூஸ் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்

இந்த நிலையில் தன்னுடைய கேப்டன் தோனி குறித்து பேசும் பொழுது “அவரிடமிருந்து நாங்கள் நிறைய அப்யூஸ் வாங்கி இருக்கிறோம். அதே சமயத்தில் களத்தில் நடப்பது அங்கேயே போய்விடும். அதை அவர் எப்பொழுதும் வெளியே எடுத்துக் கொண்டு வர மாட்டார். ஒரு பொழுதும் அதை வைத்து உங்களிடம் அவர் கோபப்பட மாட்டார். நான் அவரிடம் எப்படி நிறைய கேட்டு இருக்கிறேன்”

“ஒரு வேகப்பந்துவீச்சாளராக நீங்கள் அதிக கவனத்தை இழக்க நேரிடும். நீங்கள் உங்களைச் சுற்றி கூட்டம் செய்யக்கூடியவற்றுக்கு எதிர்வினை ஆற்றும் பொழுது அது தோனியை மிகக் கடுமையாக கோபப்படுத்தி விடும். இந்த காரணத்திற்காக நான் அவரிடம் திட்டு வாங்கி இருக்கிறேன்”

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை முடிந்ததும்.. எங்களுக்காக அந்த முன்னாள் இந்திய வீரர்.. கண்ணீர் விட்டு அழுதார் – ஆப்கான் கேப்டன் பேட்டி

“இப்படித்தான் தீபக்சகர் இடம் ஒரு முறை நக்குல்-பால் போட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் அவர் இரண்டு பந்துகள் சரியாக வீசிவிட்டு மீண்டும் அந்த பந்தை வீசினார். அது பேட்ஸ்மேன் தலைக்கு மேல் சென்றது. அந்த நேரத்தில் வந்த தோனி அவர் தோள் மீது கை போட்டு கூட்டி வந்து ‘இங்கு நீயும் முட்டாள் கிடையாது உனக்கு சொல்கின்ற நானும் முட்டாள் கிடையாது’ என்று கூறினார். இப்படியான காரணங்களுக்கு அவருக்கு கோபம் வரும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -