இவன் யாரென்று தெரிகிறதா? லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் சிக்ஸர் மழை பொழிந்த டாப்பில் இருக்கும் யுவராஜ் சிங்!

0
2098

நடந்து முடிந்த லெஜென்ஸ் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்து டாப்பில் உள்ளார் லெஜெண்ட் யுவராஜ் சிங்.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் சாலை பாதுகாப்பு டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இதில் பங்குபெற்ற 8 அணிகளுக்கும் மொத்தம் 5 ஆட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் முதல் 4 இடங்களைப் பிடித்த இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

நேற்றைக்கு முந்தைய தினம் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதியதில், இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று இலங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இரு அணிகளும் மோதிய இறுதிப்போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா லெஜன்ஸ் அணி 195 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை லெஜன்ஸ் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா லெஜென்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்தியா லெஜன்ஸ் அணி வென்றுள்ளது.

தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், 21 சிக்ஸர்கள் அடித்து இத்தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இதே பட்டியலில் பதான் சகோதரர்கள் யூசுப் பதான் மற்றும் இர்பான் பதான் இருவரும் 17 மற்றும் 14 சிக்ஸர்கள் முறையே 2வது மற்றும் 4வது இடங்களில் இருக்கின்றனர்.

- Advertisement -