சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட மிகப்பெரிய அனுபவம் வேண்டியிருக்கும். நல்ல திறமையான வீரர்களை மட்டுமே ஒவ்வொரு அணி நிர்வாகமும் டெஸ்ட் போட்டியில் தங்களுடைய சர்வதேச அணிகளில் விளையாட வைக்கும். இளம் வீரர்கள் திறமையாக விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பை எல்லா அணி நிர்வாகமும் வழங்கிவரும்.
ஆனால் இளம் வயதில் எந்த ஒரு அணி நிர்வாகமும் அவ்வளவு எளிதாக டெஸ்ட் போட்டியை வழிநடத்தும் கேப்டன் பதவியை எந்த அணி நிர்வாகமும் தந்துவிடாது. இருப்பினும் ஒரு சில முறை இளம் வீரர்களுக்கு டெஸ்ட் போட்டியை தலைமை தாங்கும் பதவி கிடைத்துள்ளது. அப்படி தங்களுடைய இளம் வயதில் டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கிய வீரர்களை பற்றி பார்ப்போம்.
1. ரஷித் கான் – 20 வயது (20 ஆண்டுகள் மற்றும் 350 நாட்கள்)
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று சொல்வதைவிட உலக அளவில் தற்போது விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர்கள் தலைசிறந்த வீரர் இவர் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இவருக்கு 20வது வயதிலேயே ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்பு வந்து சேர்ந்தது. 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இவர் முதல் முறையாக ஆப்கானிஸ்தான்டெஸ்ட் அணியின் கேப்டனாக விளையாடினார்.
இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் 34 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அதேபோல பேட்டிங்கில் 5 போட்டிகளில் விளையாடி 106 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. டாட்டென் டைபு – 20 வயது (20 ஆண்டுகள் மற்றும் 358 நாட்கள்)
ஜிம்பாப்வே சேர்ந்த இவர் தன்னுடைய இருபதாவது வயதில் ஜிம்பாப்வே அணியை டெஸ்ட் போட்டியில் வழிநடத்தி விளையாடினார். மொத்தமாக 28 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 1546 ரன்கள் குவித்திருக்கிறார்.
2001 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரை ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச போட்டிகளில் டைபு விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பங்குபெற்று இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2004 ஆம் ஆண்டு,தன்னுடைய இருபதாவது வயதில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை கேப்டனாக வழிநடத்தி இவர் விளையாடினார்.
3. நவாப் பட்டவுடி – 21 வயது (21 வருடம் மற்றும் 77 நாட்கள்)
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 46 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பேட்டிங்கில் 2793 ரன்களும் அதேசமயம் பவுலிங்கில் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார். பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டியில் 15,425 ரன்களையும் இவர் குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1962 ஆம் ஆண்டு, தன்னுடைய 21வது வயதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இவர் கேப்டனாக வழிநடத்தி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்களை பொருத்தவரையில் மிக இளம் வயதிலேயே டெஸ்ட் அணிக்கு கேப்டனாக விளையாடியரும் இவர் தான்.
4. வக்கார் யூனிஸ் – 22 வயது (22 ஆண்டுகள் மற்றும் 15 நாட்கள்)
பாகிஸ்தானை சேர்ந்த ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளரான இவர் மொத்தமாக 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 373 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். அதேசமயம் பேட்டிங்கில் 87 போட்டிகளில் விளையாடி 1010 ரன்கள் குவித்திருக்கிறார். ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் 956 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1993 ஆம் ஆண்டு தன்னுடைய 22-வது வயதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை தலைமைதாங்கி வக்கார் யூனிஸ் வழிநடத்தினார்.
பாகிஸ்தான் அணிக்காக தலைமை பயிற்சியாளராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது சில போட்டிகளில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக இவர் பணியாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5. கிரீம் ஸ்மித் – 22 வயது (22 வருடங்கள் மற்றும் 82 நாட்கள்)
இவர் தன்னுடைய 22-வது வயதில் தென் ஆப்பிரிக்க அணியை டெஸ்ட் போட்டியில் தலைமை தாங்கி வழி நடத்த தொடங்கினார். 2003ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணியை டெஸ்ட் போட்டியில் இவர் வழிநடத்த தொடங்கினார்.
தென் ஆப்பிரிக்கா மொத்தமாக 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9265 ரன்கள் குவித்திருக்கிறார். அதேசமயம் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் 12916 அறிவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் நிறைய போட்டிகளை ( 109 போட்டிகள் ) தலைமை தாங்கிய வீரர் என்கிற பெருமையை கிரீம் ஸ்மித் தற்போதுவரை தனது பெயருக்கு பின்னால் வைத்திருக்கிறார்.
இவரது தலைமையில் 109 போட்டிகளில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 53 போட்டிகளில் வெற்றியும், 29 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அதேசமயம் 27 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளது