“இளம் வீரர்கள்.. 243*ரன்.. வெளிய அனுப்பின இந்த வீரரை பார்த்து கத்துக்கோங்க” – கைஃப் அறிவுரை!

0
470
Kaif

ஒட்டுமொத்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அதில் சில தனித்துவமான இந்திய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானவர் ராகுல் டிராவிட்!

டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகும் முறைக்கு ராகுல் டிராவிட்தான் சிறந்த புத்தகமாக இருக்க முடியும். புதிய பந்தை தேய விட்டு, பந்துவீச்சாளர்களை களைப்படைய வைத்து, தான் ரன்கள் அடிப்பது மட்டுமில்லாமல், தன்னுடன் சேர்ந்து விளையாடும் வீரர்களையும் ரன் அடிக்க உதவி செய்வதில் வல்லவர்.

- Advertisement -

புதிய பந்தின் எல்லா கஷ்டங்களையும் தானே சுமந்து, அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டத்தை மிக எளிதாக மாற்றிக் கொடுப்பவர். மேலும் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அசாதாரணமான பல இன்னிங்ஸ்களை விளையாடியிருக்கிறார்.

கிரிக்கெட்டின் மிகவும் கடினமான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பொழுது, இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் யூனிட்டில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருந்தது.

இப்படியான நேரத்தில்தான் சௌராஷ்டிரா கிரிக்கெட்டில் இருந்து ஜூனியர் ராகுல் டிராவிட்டாக செதேஸ்வர் புஜாரா இந்திய டெஸ்ட் அணிக்குள் வந்தார். அடுத்து பேட்டிங்கில் ராகுல் டிராவிட் செய்த எல்லா வேலைகளையும் இந்திய டெஸ்ட் அணியில் செய்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்த நாளில் புஜாராவின் விக்கெட்டை மட்டும் கைப்பற்றி விட்டால் போதும் என்று பந்து வீசிய காலங்கள் இருக்கிறது. அந்த அளவிற்கு மிக உறுதியான மனநிலையோடு விக்கெட்டை கொடுக்காமல் விளையாட கூடியவர்.

சில காலமாக அவருடைய பேட்டிங் ஃபார்ம் சரிந்தது உண்மைதான். இதன் காரணமாக அவர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்க டெஸ்ட் சுற்றுப்பயணங்களில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்பொழுது ரஞ்சித் தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடுகிறார். மேலும் இந்த வருடம் துவங்கிய முதல் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 243 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.

புஜாரா குறித்து ட்விட்டரில் எழுதி இருக்கும் முகமது கைஃப் கூறும் பொழுது ” இந்திய அணியின் தேர்வாளர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அவர் கவலைப்படாமல், புஜாரா தொடர்ந்து விளையாடி ரன்கள் குவித்து வருகிறார். அவரது அர்ப்பணிப்பு கிரிக்கெட் விளையாடும் அனைத்து இளம் வீரர்களுக்கும் ஒரு சிறந்த பாடம்!” என்று கூறியிருக்கிறார்!