“உலகத்தில் யாருமே சொந்த அணியின் விக்கெட்க்கு கொண்டாடமாட்டார்கள் ஆனால் …” – சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து பேசிய கெவின் பீட்டர்சன் !

0
1613

இன்று சென்னையில் நடைபெற்ற கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது கிரிக்கெட்டு ஹீரோக்களை கடவுள் போலவும் சூப்பர் ஹீரோக்கள் போலவும் பாவித்து கொண்டாடி வருகின்றனர் . இது சுனில் கவாஸ்கர் கபில் தேவ் காலம் தொட்டே நடந்து வருகின்ற ஒன்று .

- Advertisement -

ஒவ்வொரு காலத்திற்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு என ஒரு ஆஸ்தான ஹீரோ இருந்து வந்திருக்கிறார் . 70களின் மத்தியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஹீரோவாக இருந்தவர் சுனில் கவாஸ்கர் . 80களில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற பிறகு கபில்தேவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது

90களின் துவக்கத்தில் இந்திய அணிக்கு இளம் புயலாக வந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ரசிகர்களின் பிதாமகன் ஆகவும் ஆஸ்தான ஹீரோவாகவும் விளங்கி வருகிறார் . இந்தியாவில் கிரிக்கெட்டை விரும்பி ரசிக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் அவர்தான் முதல் ஹீரோ . இத்தகைய டெண்டுல்கரின் புகழ் கூட எம் எஸ் தோனி என்ற பெயருக்கு முன் பிரகாசம் குறைந்தது என்றால் அது மிகையாகாது .

2004 ஆம் ஆண்டு ஜார்கண்டில் இருந்து வந்த அந்த இளைஞன் இன்று இந்திய கிரிக்கெட்டின் பிதாமகனாக வளர்ந்து நிற்கிறான் . இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் உச்சரிக்கும் ஒரு பெயர் எம்எஸ் தோனி. இத்தகைய எம் எஸ் தோனி ஆடுகளத்திற்கு வரும்போது அவருக்கு ரசிகர்கள் கொடுக்கும் உற்சாக வரவேற்பு பார்த்து பொறாமைப்படாத அவர்களே இல்லை என கூறலாம் .

- Advertisement -

ஒரு கிரிக்கெட் வீரருக்கான இது போன்ற வரவேற்பு வேறு எங்கும் கண்டதில்லை என கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தெரிவித்து வந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் . எம் எஸ் தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வரும்போது அவருக்கு கொடுக்கப்படும் வரவேற்பு உலகின் வேறு எந்த நாடுகளிலும் காண முடியாத ஒன்று எனக் கூறியுள்ளார் .

மேலும் இது பற்றி பேசி இருக்கும் அவர் ” அணி எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் தனது சொந்த அணியின் விக்கெட் விழும்போது ரசிகர்கள் கொண்டாடுவதை வேறு எங்கும் பார்க்க முடியாது என தெரிவித்திருக்கிறார். ஒரு விக்கெட் விழுந்து அதன் பிறகு எம்எஸ்.தோனி பேட்டிங் செய்ய வருகிறார் என்றால் ரசிகர்கள் அந்த விக்கெட்டை மறந்து தோனியை கொண்டாட துவங்குகின்றனர் . இது உலகின் வேறு எந்த பகுதியிலும் காணாத ஒரு காட்சி” என வியந்து பேசியிருக்கிறார் கெவின் பீட்டர்சன்.