என்ன பண்றீங்க தெரியாது.. அடுத்த மேட்ச் இந்த 2 மாற்றத்தை பண்ணி ஆகணும்.. சுனில் கவாஸ்கர் அதிரடி

0
8287

இந்திய அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கிரிக்கெட் விமர்சகர்களிடையே கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதனால் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

இந்திய அணி இந்த முறை தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலுமே பலவீனம் காணப்பட்டது. விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் தவிர வேறு யாரும் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை.

- Advertisement -

பந்து வீச்சிலும் பு ம்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர். சுழற்பந்து வீச்சுக்கு பெரிதும் உதவாத தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில், காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் விளையாடினார். பந்து வீச்சில் சிறப்பாக செயல்படாவிட்டாலும் பேட்டிங்கில் அணிக்கு தேவையான பங்களிப்பை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினார்.

மேலும் பந்துவீச்சுத் துறையிலும் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் காற்றில் பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகக்கூடியவை. இவரால் அதிகமாக பந்துகளை ஸ்விங் செய்ய முடியவில்லை. ரன்களையும் அதிகமாக வழங்கி உள்ளார்.

- Advertisement -

எனவே இந்த இரண்டு வீரர்களுக்கு மாற்றாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் அணிக்குள் வரவேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி இவ்விரு வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது
“ரவீந்திர ஜடேஜா நல்ல உடல் தகுதியில் இருப்பார் என்று நம்புகிறேன். அவர் அடுத்த போட்டியில் கட்டாயம் இடம் பெற வேண்டும். அவரால் இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்த முடியும். மேலும் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக முகேஷ் குமார் மற்றொரு வாய்ப்பாக இருப்பார். பொதுவாக கேப்டவுன் ஆடுகளத்தில் காற்றில் பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகும்.

எனவே ஸ்விங் பந்துவீச்சாளர்களால் அதிக விக்கெட் எடுக்க முடியும். முகேஷ் குமார் நல்ல தீர்வாக இருப்பார் என்று நம்புகிறேன். எனவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமில்லாத ஆடுகளத்தில் பேட்டிங்கை வலுப்படுத்த ரவீந்திர ஜடேஜா நிச்சயம் இடம் பெற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -