பிளாப் 11.. 2023 ஓடிஐ கிரிக்கெட்டில் சொதப்பிய வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட அணி

0
392

டி20 கிரிக்கெட்டின் வரவால் கடந்த சில வருடங்களாக 50 ஓவர் கிரிக்கெட்டின் மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் இல்லாமல் போனது. ஆனால் இந்த 2023ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டின் ஆண்டு என்று கூறலாம். இந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் காரணத்தால் அனைத்து நாடுகளும் ஒருநாள் கிரிக்கெட்டின் மீது கவனம் செலுத்தின.

சில வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ரெக்கார்டுகளை வைத்துள்ளனர். ஆனால் சில வீரர்கள் இந்த வருடத்தில் மோசமான ரெக்கார்டுகளையும் வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது கிரிக்கெட் ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் முக்கியமான நேரத்தில் அணிக்கு தேவையான பங்களிப்பை அளிக்கத் தவறவிட்டனர். இந்தப் பிளேயிங் லெவன் அணியானது புள்ளி விவரங்களின் அடிப்படையில் உருவாக்கப்படாமல் மாறாக முக்கியமான நேரங்களில் வீரர்களின் செயல்பாடுகளை வைத்து அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

எனவே 2023ஆம் ஆண்டின் மோசமான பிளேயிங் லெவன் அணியைத் தற்போது காணலாம்.

தொடக்க ஆட்டக்காரர்கள்- லிட்டன் தாஸ் – பின் ஆலன்

இருவரும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள். வங்காளதேச அணியைச் சார்ந்த லிட்டன் தாஸ் 29 போட்டியில் விளையாடி 651 ரன்கள் குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 26 ஆக இருந்துள்ளது. அதே நேரத்தில் 5 முறை டக் அவுட்டும் ஆகியுள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நியூசிலாந்து அணியைச் சேர்ந்த பின் ஆலன் 11 இன்னிங்ஸ்களில் 17.72 சராசரியில் 195 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

- Advertisement -

மிடில் ஆர்டர் – ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், சூர்யகுமார் யாதவ், தசுன் ஷனகா, ஜோஸ் பட்லர் மற்றும் ஜேசன் ஹோல்டர்.

மிடில் ஆர்டரில் 4 பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் இந்தியாவிற்கு எதிராக எப்போதும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் அவர்களின் செயல்பாடு மிக மோசமாக அமைந்தது. சூரியகுமார் யாதவ் இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது பேட்டிங் பங்களிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை நொறுக்கினார்.

ஆல் ரவுண்டர்களான தசுன் சனகா மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோருக்கும் இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது.சனகா இந்தியாவுக்கு எதிராக ஒரு சதம் அடித்துள்ளார். ஆனால் 24 போட்டிகளில் மொத்தம் 338 ரன்கள் மற்றும் எடுத்துள்ளார். ஜேசன் ஹோல்டர் 2023ஆம் ஆண்டு உலக கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான தகுதி சுற்றில் சூப்பர் ஓவரில் 30 ரன்களை வழங்கி வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச் சுற்றில் இருந்து வெளியேற முக்கிய காரணமாக அமைந்தார்.

பந்துவீச்சாளர்கள் – அக்சர் படேல், கைல் ஜேமிசன் மற்றும் பிரைடன் கார்ஸ் எக்ஸ்

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரான அச்சர் பட்டேல் இந்த ஆண்டு 11 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். இவரின் பந்துவீச்சு சராசரி 60க்கும் அதிகமாக இருந்துள்ளது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜாமிசன் மற்றும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரைடன் கார்ஸ் எக்ஸ் இவர்கள் இருவரும் இந்த ஆண்டு அதிக ரன்களை வழங்கியுள்ளனர். மேலும் 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் போதிய விக்கட்டுகளை இவர்களால் எடுக்க முடியவில்லை.