“ஐபிஎல் பிறகு நீங்க விளையாடவே இல்லை.. உங்களுக்கு எதுக்கு ஓய்வு?” – இந்திய நட்சத்திர வீரர்கள் மீது இந்திய முன்னாள் வீரர் கடுமையான விமர்சனம்!

0
364

இந்திய அணி வீரர்கள் இந்த ஆண்டு மார்ச் இறுதி முதல் மே மாதம் இறுதி வரை இரண்டு மாதங்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தார்கள்.

இதற்கு அடுத்து ஒரு வாரம் கழித்து ஜூன் மாத துவக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி ஒரு மாத காலம் ஓய்வில் இருந்து ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் என்று மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடினார்கள்.

அதற்கு அடுத்து காயத்திலிருந்து திரும்பி வந்த ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அயர்லாந்துக்கு இளம் வீரர்கள் கொண்ட ஒரு அணி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அணியில் முன்னணி வீரர்கள் யாரும் பங்கு பெறவில்லை.

இதற்கு அடுத்து ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி ஓய்வில் இருந்து திரும்பியது. தற்பொழுது ஆசியக் கோப்பை முடித்துக் கொண்டு, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தற்பொழுது இது சம்பந்தமாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “அணியின் எல்லா வீரர்களும் ஒன்றாக விளையாடுவது முக்கியம் என்று நான் கருதுகிறேன். ஆனால் கடந்த காலத்தில் துரதிஷ்டவசமாக ஸ்ரேயாஸ், பும்ரா மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் காயம் அடைந்திருந்ததால் இது நடக்கவில்லை.

இடையில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் நிறைய ஓய்வு எடுத்தார்கள். ஆகஸ்ட் மாதம் முழுவதும் அவர்கள் விளையாடவில்லை. உண்மையில் ஐபிஎல் தொடருக்கு பின்பு அவர்கள் அதிகம் விளையாடவில்லை.

இவர்கள் இருவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடினார்கள், அதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 முதல் 8 நாட்கள் சேர்த்து மொத்தமாக விளையாடினார்கள்.

இவர்கள் இருவரையும் எடுத்துக் கொண்டால் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையில் பெரிதாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இவர்கள் ஒன்றாக சேர்ந்து எப்பொழுதும் விளையாடு இருந்தால் அது நன்றாக இருந்திருக்கும்!” என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று கூறியிருக்கிறார்!