“ஜடேஜாகிட்ட நீங்க இப்படி இருந்தா.. அவரை எதுவுமே பண்ண முடியாது!” – அனில் கும்ப்ளே அசத்தலான பாராட்டு பேச்சு!

0
2043
Jadeja

இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறுகின்ற காரணத்தினால் பங்கேற்கும் பத்து அணிகளுமே தங்களது 15 பேர் கொண்ட அணியில் சுழற் பந்துவீச்சாளர்களை சேர்ப்பதில் மிகுந்த கவனம் காட்டி வந்தன.

இந்த வகையில் போட்டியை நடத்தும் இந்திய அணி பிரதான சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை மட்டுமே அணியில் சேர்த்தது. ஆரம்பத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இருந்தார்கள்.

- Advertisement -

உலகக்கோப்பை இந்திய அணியில் சாகலுக்கு இடம் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் இந்திய தேர்வுக்குழு அப்படியான முடிவுக்கு செல்லவில்லை. இதுகுறித்து ஹர்பஜன் சிங் தன்னுடைய கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் அக்சர் படேல் காயம் அடைய, இந்திய அணிக்கு இன்னொரு பிரதான சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கிடைத்தார். இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என இந்திய அணி தற்போது அமைந்து கொண்டது.

இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரதான சுழற் பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 என மூன்று விக்கெட்டுகள் எடுக்க, சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியா ஸ்மித், லபுஷேன் மற்றும் கேரி என மூன்று முக்கிய வீரர்களின் விக்கெட்டை உடனுக்குடன் கைப்பற்றி, ஆஸ்திரேலியாவை சரித்தார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கைப்பற்றுவதில் சில ஆண்டுகளாக ரவிந்திர ஜடேஜா பின்னடைவைச் சந்தித்து வந்தார். ஆசியக் கோப்பைக்கு முன்னால் வரை அவர் இந்த வடிவத்தில் விக்கெட் டேக்கராக இல்லை. ஆனால் ஆசிய கோப்பை தொடரிலிருந்து அவருக்கு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் கிடைத்து வருகிறது.

நேற்று அவரது செயல்பாடு குறித்து பேசி உள்ள இந்திய அணியின் லெஜெண்ட் சுழற் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே கூறும்பொழுது “ஜடேஜாவுக்கு எதிராக நீங்கள் அடித்து விளையாடும் நோக்கம் இல்லாமல் அமைதியாக இருந்தால் எதையுமே செய்ய முடியாது. அவர் ஒரு ஓவரின் ஆறு பந்தையும் ஒரே புள்ளியில் தொடர்ந்து வீசுவார்.

அவர் இந்த ஆடுகளத்தில் செய்தது எல்லாம் பந்தின் கோணத்தை மாற்றி மாற்றி வீசினார். வலதுகை பேட்ஸ்மேன் ஸ்மித்துக்கு ஸ்டெம்ப்பை ஒட்டி வந்து முதலில் பந்து வீசினார். பிறகு நகர்ந்து வந்து வீசினார். அப்போது ஸ்மித் பந்து அதே கோணத்தில் வரும் என்று ஏமாந்து விட்டார். பந்து திரும்பி ஸ்டெம்பை தாக்கி விட்டது. அது மிகச் சிறந்த புத்திசாலித்தனமான பந்துவீச்சு என்று கூறி இருக்கிறார்!