இந்த பிளேயரை இஷ்டத்துக்கு எல்லாம் யூஸ் பண்ண முடியாது ; வாசிம் ஜாபர் எச்சரிக்கை!

0
313

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது . டி20 போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணிக்கு போற்றும் மூன்றாவது தொடர் இதுவாகும் .

இந்திய அணிக்காக சமீப காலமாகவே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் ஹர்திக் பாண்டியா. சமீபத்தில் நடந்த முடிந்த டி20 உலக கோப்பையில் கூட பேட்டிங்கிலும் வந்து வீச்சிலும் கலக்கினார்.

- Advertisement -

தற்போது நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பேட்டிங்கில் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை என்றாலும் பந்திவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இலங்கை அணி உடன் நாளை நடைபெறவிருக்கும் ஒருநாள் போட்டிக்கான அணியிலும் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார் . இவர் கடைசியாக இந்திய அணிக்கு ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில் பேட்டிங் மற்றும் போலி இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருது பெற்றார் . அதன் பிறகு பணிச்சுமை மேலாண்மை காரணமாக டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார் தற்போது ஐம்பது ஓவர் உலகக் கோப்பை இந்த வருடத்தின் இறுதியில் நடக்க இருப்பதால் ஒரு நாள் போட்டிக்கான அணியில் உம் சேர்க்கப்பட்டுள்ளார் .

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தூக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் சேர்த்து இருப்பது இந்திய அணியின் காம்பினேஷனுக்கு வலு சேர்க்கும் ஒன்று என்றாலும் ஹர்திக் பாண்டியாவின் உடல் தகுதியை பொறுத்து இந்த முடிவு எந்த மாதிரியான பலனளிக்கும் என்று கூறியிருக்கிறார் .

- Advertisement -

இது பற்றி தொடர்ந்து பேசிய வாசிம் ஜாபர் இலங்கை அணியுடன் ஆனால் தொடரின் போது கூட முதல் போட்டியில் ஆட்டத்தில் அவர் காயம் காரணமாக வெளியேறியதை சுட்டிக் காட்டியவர் தற்போது இருக்கும் உடற் தகுதியை வைத்து பார்க்கும் போது ஹர்திக் பாண்டியாவால் ஆட்டத்தில் ஏழு அல்லது எட்டு ஓவர்களை தான் வீச முடியும்.

உலகக்கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஹர்திக் பாண்டியாவை வைத்து பரிசோதனை செய்யும்போது இந்திய அணி அவரை கவனமாக கையாள வேண்டும் . இப்பொழுதுதான் பெரிய காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார் . அதனால் பந்துவீச்சில் இந்திய அணி அவரை எவ்வாறு கையாள்கிறது என்பதை பொறுத்து தான் அவரது உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை அறிய முடியும் என்று கூறி இருக்கிறார்