“இப்படி கேப்டன்சி பண்ணினா ஜெயிக்கவே முடியாது!” – பாபர் அசாம் குறைகளை பட்டியல் போட்ட இந்திய முன்னாள் வீரர்!

0
1056
Babar

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பாகிஸ்தான் அணியின் பரபரப்பான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஏமாற்றமான முறையில் தோல்வி அடைந்தது.

முக்கியமான நேரங்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தன்னுடைய பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் தற்போது விமர்சனம் ஆகி வருகிறது.

- Advertisement -

நேற்று தென் ஆப்பிரிக்கா அணி இறுதிக்கட்டத்தில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த பொழுது கூட, அவர்கள் மிக எளிதாக சிங்கிள் ரன் ஓடியெடுத்தார்கள்.

கேப்டன் பாபர் அசாம் அட்டாக்கிங் பீல்டிங் செட் அப் வைக்கவில்லை. அவர் மிகவும் தற்காப்பு முறையில் சென்றார். இறுதியில் ஆட்டம் கைநழுவி போய்விட்டது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “நேற்றைய போட்டியில் எட்டு விக்கெட்டுகள் விழுந்தது பின்பு அது ஒன்பது விக்கெட்டுகள் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு மாறியது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் கேப்டன் என்ன செய்தார் என்பதுதான் முக்கியமான விஷயம். குறைந்தபட்சம் நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் சிங்கிள்ஸ் எடுக்க அனுமதித்தீர்கள். இறுதியாக அதற்கான விலையை கொடுக்க வேண்டியதாக இருந்தது.

- Advertisement -

ஓவர்கள் மிக அதிகமாக இருந்தது. இப்படியான நேரத்தில் நீங்கள் ஓவர்களை முடித்து அவர்களை வெல்ல முடியும் என்று நினைத்தீர்களா? அவர்கள் சிங்கிள் ரன் எடுப்பதற்கான அத்தனை ஏரியாவையும் திறந்து வைத்திருந்தீர்கள்.

இதனால் உங்களுக்கு என்ன லாபம்? அவர்கள் கடைசி வரை விளையாடுவார்கள் நீங்கள் உங்கள் ரன்னை வைத்து ஆட்டத்தை காப்பாற்றி விடலாம் என்று நினைத்திருந்தால் நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு ஸ்லிப் வைக்கவில்லை. மேலும் உள் வட்டத்தில் ஐந்து பீல்டர்களையும் வைக்கவில்லை.

நவாசின் கதியும் அப்படித்தான். அவர் துபாயில் ஹர்திக் பாண்டியாவிடம் விட்டுக் கொடுத்தார். அடுத்து ஆஸ்திரேலியாவில் அஸ்வினிடம் விட்டுக் கொடுத்தார். இப்பொழுது கேசவ் மகாராஜுக்கு கொடுத்திருக்கிறார். அவர் கஷ்டமான நேரங்களில் இப்படித்தான் இருந்திருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!