“உடல் தகுதி இருந்தால்தான் பீல்டிங் பண்ண முடியும்.. வேற எண்ணத்தோட நின்னா முடியாது!” – பாபர் அசாம் சொந்த அணி மீது பரபரப்பான குற்றச்சாட்டு!

0
1670
Babar

நேற்று உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது அவர்களது நாட்டிலும் கிரிக்கெட் வட்டாரத்திலும் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி இடம் அடைந்த படுதோல்வியின் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனுஸ் போன்றவர்கள் வெளிப்படையாக தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலிமையாக எழ ஆரம்பித்து இருக்கிறது. ஒட்டுமொத்த அணியாக பாகிஸ்தான் மூன்று துறைகளிலும் நேற்றைய போட்டியில் தோற்றது.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறும்பொழுது “ஆமாம் தோல்வி எங்களை காயப்படுத்தி இருக்கிறது. நாங்கள் 280 முதல் 290 ரன்கள் எடுக்க நினைத்தோம். நாங்கள் அதைச் செய்த பிறகு போட்டிக்குள் வர முடியவில்லை.

மிடில் ஓவர்களில் நாங்கள் நன்றாகவே தொடங்கினோம். அந்த இடத்தில் எங்களுக்கு விக்கெட் தேவைப்பட்டது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதியிலும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் உதவி இருந்தது. ஆனால் நாங்கள் சரியான லென்த்தில் வீசவில்லை. ஒவ்வொரு ஓவரிலும் நாங்கள் ஒரு பவுண்டரியை கொடுத்தோம். இதனால் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்படவில்லை.

- Advertisement -

பீல்டிங் என்பது மனோபாவத்தை பற்றியது. மேலும் நான் அணியில் அப்படி எதையும் பார்க்கவில்லை. நீங்கள் கூடுதல் முயற்சி செய்து உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். நீங்கள் பந்தில் கவனம் செலுத்த வேண்டும். மற்ற எண்ணங்களில் கவனம் இருக்கக் கூடாது. நீங்கள் ஒரு பீல்டராக முனைப்புடன் இருக்க வேண்டும். ஒரு பீல்டிங் யூனிட்டாக அது கொஞ்சம் குறைவாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

பந்துவீச்சில் நாங்கள் விரும்பியபடி செயல்பட முடியவில்லை. இங்கு பந்து கொஞ்சம் வெளியில் கொடுத்தாலும் பவுண்டரிகள் சென்று விடும். இங்கு எல்லைகள் சிறிதாக இருக்கின்றன. தவறு செய்ய இங்கு வசதி கிடையாது.

நீங்கள் தொடர்ச்சியாக பவுண்டரிகள் கொடுக்கும்பொழுது நீங்கள் ரன்னை கட்டுப்படுத்த முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். உங்களால் விக்கெட்டை கைப்பற்ற முடியாது. மேலும் நாங்கள் ஸ்டெம்புக்குள் பந்தை வீசவில்லை!” என்று கூறியிருக்கிறார்!