“தோனி ஊர்ல இருந்து வந்தா நீ தோனி கிடையாது தம்பி” – சீண்டிய இந்திய முன்னாள் வீரர் பதிலடி தந்த இஷான் கிஷான்!

0
301
Dhoni

இந்த ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தயாரிப்புகளில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன!

இந்த வகையில் இந்திய அணி தமக்கான பேட்டிங் வரிசையில் நான்காவது வீரர் மற்றும் இரண்டாவது விக்கெட் கீப்பர் யார் என்கின்ற தேடுதலில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. மேலும் வேகப்பந்துவீச்சு படையில் முகமது சிராஜ் உடல் தகுதி பெறவில்லை என்றால், அதற்கு மாற்றாக முகேஷ் குமாரை கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் தரப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாட இருக்கும் தொடரான ஆசிய கோப்பையில் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் விளையாட மாட்டார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு தற்போது விக்கெட் கீப்பர்களாக இருக்கும் இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருமே ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்று விளையாடவும் வாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டாவது கேட்பதாக தன்னுடைய பெயரை வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்று அரை சதங்கள் விளாசி, தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பிங் செய்யும் பொழுது ஸ்டம்பிங் செய்ய வந்து பிறகு நிறுத்தி அதை ரன் அவுட் ஆக மாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்த சம்பவத்தை நேரலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது வர்ணனையில் “ஸ்டெம்பிங் செய்ய வந்து ரன் அவுட் செய்வது அரிதான ஒரு விஷயமாகும். நான் பார்த்த பொழுது கால் உள்ளேதான் இருந்தது. நீங்கள் ராஞ்சியில் இருந்து வரலாம் ஆனால் உங்கள் பெயர் எம்.எஸ்.தோனி கிடையாது” என்று கூறியிருந்தார்.

இதை ஸ்டெம்ப் மைக் வழியாக கேட்ட இஷான் கிஷான் மிகவும் கூலாக “இருக்கட்டும் பரவாயில்லை!” என்று பதிலளித்தார். இதைச் சற்றும் எதிர்பாராத ஆகாஷ் சோப்ரா “எவ்வளவு இனிமையான பையன். நாங்கள் உன்னை நேசிக்கிறோம்!” என்று திருப்பி வாழ்த்தினார்.

ஒருநாள் தொடரை முடித்துக் கொண்டு, இன்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களமிறங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.