“நேற்று இந்த 24 வயது இந்திய பையனின் தைரியம்.. நான் பிரமிச்சு போயிட்டேன்..” – லெஜன்ட் ஷான் பொல்லாக் பேச்சு!

0
16514
Pollock

நேற்று இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவில் வைத்து, அந்த நாட்டு அணியை அபாரமாக வீழ்த்தி அசத்தியது.

இந்திய அணியின் இந்த வெற்றியில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஸ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று தென் ஆப்பிரிக்காவின் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் இருவரின் சிறப்பான செயல்பாட்டால் 27 ஓவர்களில் 116 ரன்களுக்கு சுருண்டது.

இதற்கடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி அறிமுக போட்டியில் விளையாடிய சாய் சுதர்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரது அதிரடி அரை சதங்களால் 16 ஓவர்களில் எளிதான வெற்றியை பெற்று அசத்தியது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் குறிப்பாக அர்ஸ்தீப் சிங் குறித்து பேசி உள்ள தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சு லெஜெண்ட் ஷான் பொல்லாக் கூறும்பொழுது ” இது அவருடைய மிகச்சிறந்த பந்துவீச்சு என்று நான் நினைக்கிறேன். அவர் கடைசியாக இதே மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் பந்து வீச வரவில்லை.

- Advertisement -

நான் இவரைத் தொடர்ந்து சில ஆண்டுகளாக கவனித்து வந்ததில் இவரிடம் இரண்டு சிறப்பான விஷயங்கள் இருக்கிறது. முதலில் புதிய பந்தை பயன்படுத்தி ஸ்விங் மூலம் வீசுகிறார். பிறகு நேராக கடைசி ஓவர்களுக்கு சென்று வீச யார்க்கர்கள் வைத்திருக்கிறார். மேலும் சில மெதுவான பந்துகளையும் அவற்றுடன் கலக்கிறார்.

நேற்று அவருக்கு முக்கியமான விஷயமாக காற்றில் பந்தை ஸ்விங் செய்ய முடிவது அமைந்தது. அந்த விக்கெட்டில் பந்து செயல்பட்ட விதத்தில் அவர்கள் ஆச்சரியமடைந்து இருப்பார்கள். ஆடுகளம் வறண்டு இருந்த காரணத்தினால் மிகவும் க்ரிப்பாகி வந்தது.

எனக்கு அவரிடம் ஆச்சரியமான விஷயமாக இருந்தது, பந்தை காற்றில் செலுத்தும் போது பந்து நிலையான வடிவத்தில் இருந்ததுதான். அவர் முதல் விக்கெட்டை வழக்கம்போல் எடுத்தார். ஆனால் இரண்டாவது விக்கட்டுக்கு எப்படி குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு எதிராக மாற வேண்டும் என்று புரிந்து செயல்பட்டார்.

மேலும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது முன்னேறி சென்று மேலும் ஒரு விக்கெட்டை எடுக்க கூடிய தைரியமான மனநிலையில் இருக்க வேண்டும். நேற்று அவர் அப்படியான தைரியமான மனநிலையில் அற்புதமாக செயல்பட்டார்.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் தொடர்ந்து வீசுகிறோம். ஆனால் நேற்று முதல் 25 ஓவர்கள் தனது உடல் தகுதியை வைத்து அவர் தனது பத்து ஓவர்களையும் வீசிவிட்டார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சர்வதேச விக்கெட்டுக்காக நீண்ட காலம் காத்திருந்தார். ஆனால் ஐந்து விக்கெட் கிடைப்பது என்பது மிகவும் சிறப்பானது!” என்று பாராட்டி கூறியிருக்கிறார்!