அறிமுக போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய ஜெய்ஸ்வால்… சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் லெஜெண்ட்ஸ் லிஸ்டில் இடம்பிடித்து சாதனை!

0
773

அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் யஷஷ்வி ஜெய்ஸ்வால். சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் போன்ற ஜாம்பவான்களின் பட்டியலில் இடம்பிடித்து புதிய வரலாறும் படைத்திருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல்கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டாமினிக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அறிமுக வீரர் ஆலிக் அதனெஸ் 47 ரன்கள் அடித்திருந்தார். இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகள், ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதனை எடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த இந்த ஜோடி முதல் நாள் முடிவில் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி முடித்திருந்தது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு அறிமுகவீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த 13வது இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார். அத்துடன் அறிமுக டெஸ்ட் போட்டியில் இதுவரை இரண்டு இந்திய துவக்க வீரர்கள் மட்டுமே சதம் விளாசியுள்ளனர்.

- Advertisement -

2013 ஆம் ஆண்டு ஷிக்கர் தவான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சதம் அடித்தார். 2018ஆம் ஆண்டு ப்ரிதிவி ஷா அடித்தனர். ஒட்டுமொத்தமாக 16 இந்திய பேட்ஸ்மேன்கள் அறிமுக போட்டியில் சதமடித்தனர்.

கடைசியாக அடித்த மூன்று பேர் – ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ப்ரிதிவி ஷா ஆகியோர் ஆவர். மூவருமே மும்பை வீரர்கள் ஆவர். இப்போது ஆடிவரும் ஜெய்ஸ்வால் கூட மும்பை அணியை சார்ந்தவர் ஆவார்.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை பொருத்தவரை ஜெயஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அரைசதம் கடந்து விளையாடி வருகின்றனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு தற்போது வரை 142 ரன்கள் சேர்த்துள்ளது.