தேடவே வேணாம்.. இவரை தூக்கிட்டு வாங்க.. இந்தியாவுக்கு அடுத்த கேப்டன் கெடச்சாச்சு… இந்தியா ஏ அணி அபார வெற்றி!

0
10955

ஐக்கிய அரபு அமீரகம் ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்கு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் கலக்கினார் யாஷ் துல். கிடைத்த வாய்ப்பை நழுவவிட்ட சாய் சுதர்சன் பேட்டிங்கில் சோதப்பினார். இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றது.

எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றுவரும் இந்தியா ஏ அணி முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் ஏ அணியை எதிர்கொண்டது. முதலில் யுஏஇ அணி பேட்டிங் செய்தது.

- Advertisement -

யுஏஇ அணிக்கு துவக்க வீரர் அயான்ஸ் சர்மா 38 ரன்கள் அடித்தார். சிதம்பரம் 46 ரன்கள், முகமது 35 ரன்கள் அடித்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் சோதப்பலாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

50 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் அடித்திருந்த யுஏஇ 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது. அபரமாக பந்துவீசிய பவுலர் ஹர்ஷித் ஆனா 4 விக்கெட்டுகள், நிதிஷ் ரெட்டி மற்றும் மணவ் சுதர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் சாய் சுதர்சன் 8 ரன்கள், அபிஷேக் சர்மா 19 ரன்கள் அடித்திருந்தனர். 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.

- Advertisement -

3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிகின் ஜோஸ், யாஷ் துல் இருவரும் 138 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் இந்தியா ஏ அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினர்.

இதில் கேப்டன் யாஷ் துல் 84 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸ் உட்பட 108 ரன்கள் அடித்தார். நிகின் ஜோஸ் 41 ரன்கள் அடித்தார்.

எமெர்ஜிங் ஆசியகோப்பையில் இந்தியா ஏ அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு யாஷ் துல் கேப்டனாக இருக்கிறார். இவர் கடந்த அண்டர் 19 இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து, அண்டர் 19 உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.

எதிர்கால இந்திய அணிக்கு இவர் கேப்டனாக வரவும் வாய்ப்புகள் உள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.