இந்திய கிரிக்கெட்

ரோகித்தும் கம்பீரும் சச்சினை வச்சு இதை செய்யலாமே.. பொதுவான விஷயத்தை செய்ய எது தடுக்குது? – WV ராமன் கேள்வி

தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு விளையாட சென்றிருப்போம் இந்திய அணிக்கு சச்சினை வைத்து இந்திய முன்னாள் வீரர் டபிள்யூவி.ராமன் முக்கியமான கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி இந்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மேற்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் மோத இருக்கிறது. இரண்டு அணிகளுமே இந்த தொடருக்காக தனிப்பட்ட முறையில் ரகசியமான பல தயாரிப்புகளை செய்து வருகின்றன.

பிசிசிஐ உருவாக்கி இருக்கும் புதிய பயிற்சி திட்டம்

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்கான பயிற்சி மற்றும் பயிற்சி போட்டிகளை மிகவும் எச்சரிக்கையாக கையாண்டு புதிய அணுகுமுறையை கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் ரத்து செய்து தற்பொழுது மீண்டும் அனுமதி வழங்கியிருக்கிறது.

அதே சமயத்தில் இந்த பயிற்சி போட்டியை மூடிய அரங்கத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும் இதுவரையில் பயிற்சி புகைப்படங்களை வெளியிடாத இந்திய கிரிக்கெட் நிர்வாகம், இன்று தான் முதல்முறையாக மீடியாக்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது. இந்த வகையில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த விஷயங்களில் மிகவும் கண்டிப்புடன் நடந்து வருகிறது.

- Advertisement -

டபள்யூ.வி.ராமன் கோரிக்கை

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்திருக்கும் டபுள்யூ.வி.ராமன் “பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தயாரிப்புகளில், சச்சின் டெண்டுல்கரை பேட்டிங் ஆலோசகராக கொண்டு வந்து, அவரது சேவையைப் பெற்று இந்திய அணி பலனடையலாம் என்று நான் நினைக்கிறேன்.முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டுகளுக்கு நடுவே இங்கு நிறைய நேரம் இருக்கிறது. இப்படியான பேட்டிங் ஆலோசகர்களை இணைப்பது பொதுவானதுதானே. இது குறித்து சிந்திக்கலாம்தானே?” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : வெறும் 2 ஆண்டுகள்.. பும்ரா புவியை தாண்டி அர்ஷ்தீப் படைத்த அசத்தல் சாதனை.. இந்திய புதிய டி20 வரலாறு எழுத வாய்ப்பு

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மண்ணில் 53.20 ஆவரேஜில் 1850 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்டில் 55 ரன் ஆவரேஜில் 3630 ரன்கள் குவித்து, அதிக ரன் குவித்த பட்டியலில் முதல் இடத்தில் சச்சினே இருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 241 ரன்கள் எடுத்திருக்கிறார். எனவே இவரது சேவையை பெறுவது முக்கியமாகிறது!

- Advertisement -
Published by

Recent Posts