இந்திய கிரிக்கெட்

ஷமி வேண்டாம்.. 2027 உலக கோப்பைக்கு இந்த ஐந்து பாஸ்ட் பவுலர்களை எடுத்துட்டு போங்க – ரகானே பட்டியல்

​வரவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுத் துறை குறித்து முன்னாள் இந்திய வீரர் அஜின்கியா ரஹானே தனது தேர்வுகளை வெளியிட்டுள்ளார். உலகக் கோப்பை தொடரில் எந்தெந்த பவுலர்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

​சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னணி வீரர்கள் மற்றும் இளம் திறமைசாலிகள் பலரும் இந்த உலகக் கோப்பைக்கான ரேஸில் இடம்பெற்றுள்ள நிலையில், ரஹானே தேர்ந்தெடுத்த பவுலர்களின் பட்டியல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சில மூத்த மற்றும் நட்சத்திர வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

​இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் அஜின்கியா ரஹானே பேசும்போது “முதல் பவுலர் பும்ரா, அதில் எந்த சந்தேகமும் இல்லை. இரண்டாவது அர்ஷதீப் சிங், மூன்றாவது பிரசித் கிருஷ்ணா, நான்காவது முகமது சிராஜ், ஐந்தாவது மயங்க் யாதவ்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து இதுபற்றி அஜின்கியா ரஹானே பேசும்போது “நான் இந்த உலகக் கோப்பை தொடருக்கான வேகப்பந்து வீச்சு வரிசையில் இந்த ஐந்து பேரையும் தேர்வு செய்துள்ளேன். அணியின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டே இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்” என்றும் கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by

Recent Posts