வெறும் 2 ஆண்டுகள்.. பும்ரா புவியை தாண்டி அர்ஷ்தீப் படைத்த அசத்தல் சாதனை.. இந்திய புதிய டி20 வரலாறு எழுத வாய்ப்பு

0
373
Arshdeep

நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் மூன்று விக்கெட் கைப்பற்றி இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

இந்திய அணி நேற்று நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடிய 219 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 208 ரன்கள் எடுத்தது. மிக நெருக்கமாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 11 ரன்னில் வெற்றி பெற்று தொடரில் இரண்டுக்கு ஒன்று என முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

டி20 கிரிக்கெட் ஸ்பெசலிஸ்ட் பவுலர்

2022 ஆம் ஆண்டு சர்வதேச t20 கிரிக்கெட்டுக்கு இந்திய அணிக்கு அர்ஷ்தீப் சிங்கை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் அழைத்து வந்தார்கள். அதற்கு முந்தைய ஆண்டு இந்திய அணியில் அவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்கின்ற பேச்சுகள் உருவாகியிருந்தது.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக புதிய பந்திலும் மேலும் கடைசிக் கட்ட ஓவர்களில் பழைய பந்திலும் அவர் பந்து வீசிய விதம் எல்லோரையும் கவர்ந்தது. 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். உச்சமாக 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றியவராக இருந்து இந்திய அணி உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார்.

- Advertisement -

இந்திய டி20 வரலாற்றில் புதிய சாதனை

இந்திய டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் வரிசையில் சாகல் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா மூவரும் முதல் மூன்று இடங்களில் இருந்து வந்தார்கள். இந்த நிலையில் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரையும் தாண்டி இந்த பட்டியலில் அதிரடியாக அர்ஷ்தீப் சிங் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு அறிமுகமான அர்ஷ்தீப் சிங் வெறும் இரண்டு ஆண்டுகளில் 59 இன்னிங்ஸ்களில் 92 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இவருடைய பவுலிங் ஆவரேஜ் 18.47 என்று ஆரோக்கியமாக இருக்கிறது. மேலும் பவர் பிளே மற்றும் இறுதிக்கட்ட ஓவர் என பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கு எளிதான இடத்தில் பந்து வீசினாலும், இவர் ஓவருக்கு 8.34 ரன்களே தருகிறார்.

இதையும் படிங்க : டீம்ல எங்க ரெண்டு பேருக்கு பெரிய பிரஷர் இருந்தது.. கேப்டன் சூரியகுமார் காப்பாத்தி விட்டு இருக்காரு – திலக் வர்மா பேட்டி

இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர்கள் :

சாகல் – 79 இன்னிங்ஸ் – 96 விக்கெட்
அர்ஷ்தீப் சிங் – 59 இன்னிங்ஸ் – 92 விக்கெட்
புவனேஸ்வர் குமார் – 86 இன்னிங்ஸ் – 90 விக்கெட்
பும்ரா – 60 இன்னிங்ஸ் – 89 விக்கெட்

- Advertisement -