இந்திய கிரிக்கெட்

கம்பீர் எடுத்த முடிவால் சூரியவன்சி பயந்துவிட்டார்.. சின்ன பையனுக்கு இப்படி செய்திருக்கக் கூடாது – சடகோபன் ரமேஷ் பேட்டி

​நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டிவெண்டி-வெண்டி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது வழக்கமான ஓப்பனிங் பொசிஷனில் களமிறங்காமல் நம்பர் த்ரீ இடத்தில் இறக்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் மேனேஜ்மென்ட் முடிவை கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

​ஓப்பனிங் ஜோடியை மாற்றக் கூடாது என்பதற்காக மேனேஜ்மென்ட் எடுத்த இந்த முடிவினால், அந்த இளம் வீரர் சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிட்டதுடன் தனது இயல்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடியாமல் திணறினார்.

​இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் பேசும்போது “அவர் ஓப்பனிங் செய்திருக்க வேண்டும். ஒரு இளம் வீரராக, மேனேஜ்மென்ட் அவரிடம் நீங்கள் நம்பர் த்ரீ இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று சொன்னவுடனேயே அவர் பயந்து போயிருப்பார். இஷான் கிஷன் காயமடைந்த காரணத்தினால்தான் அவர் விளையாடினார். ஓப்பனிங் காம்பினேஷனை மாற்றக் கூடாது என்று மேனேஜ்மென்ட் நினைத்தது தவறு கிடையாது, ஆனால் சூர்யவன்ஷிக்கு நம்பர் த்ரீ இடத்தில் பேட்டிங் செய்த அனுபவம் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து இதுபற்றி சடகோபன் ரமேஷ் பேசும்போது “அவருடைய உண்மையான பலம் என்பது ஸ்கோர் எதுவும் எடுக்காத நிலையில் முதல் பந்திலேயே சிக்ஸர் அல்லது ஃபோர் அடிப்பதுதானா என்று எதிர்பார்த்து களமிறங்குவதுதான். அவரைப் போன்ற பேட்டர்கள் ஜீரோ ஸ்கோர் என்ற சூழ்நிலையில் ரன்களை உருவாக்கச் சொல்லும் போதுதான் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால் நம்பர் த்ரீயில் இறக்கும் போது அவர் ஒரு சூழ்நிலைக்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்” என்றும் கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by