WTC பைனல் வாய்ப்பு.. எல்லா அணிகளும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.. முழு சர்வே

0
419
WTC

2023-2025ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.

தற்பொழுது இந்தியா 68, ஆஸ்திரேலியா 62, நியூசிலாந்து 50 என வெற்றி சதவீதத்துடன் புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. மேற்கொண்டு எல்லா அணிகளுக்கும் இருக்கக்கூடிய போட்டிகளில், எத்தனை போட்டிகளில் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்று பார்ப்போம்.

- Advertisement -

ஆஸ்திரேலியா: 7 டெஸ்ட்களில் நான்கு டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டும். இதில் 5 டெஸ்ட் போட்டிகளை இந்தியாவுக்கு எதிராக உள்நாட்டிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளை இலங்கைக்கு எதிராக வெளியிலும் விளையாடுகிறது.

இந்தியா: 10 டெஸ்ட்களில் 5 போட்டிகளை வெல்ல வேண்டும். பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று என மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகளை உள்நாட்டில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது நாட்டில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா: 8 டெஸ்டுகளில் 7 போட்டிகளை வெல்ல வேண்டும். இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக அவர்களது நாட்டில் தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக உள்நாட்டில் தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

நியூசிலாந்து: 8 டெஸ்டில் 6 டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டும். இலங்கை அணிக்கு எதிராக 2, இந்திய அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளை வெளியில் விளையாடுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் மூன்று போட்டிகளில் விளையாடுகிறது.

பாகிஸ்தான்: 9 டெஸ்டுகளில் 7 போட்டிகளை வெல்ல வேண்டும். இதில் வங்கதேசம் 3, இங்கிலாந்து 2, வெஸ்ட் இண்டீஸ் 2 டெஸ்ட் போட்டிகள் என உள்நாட்டில் விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர்களது நாட்டில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள்: 9 டெஸ்ட்களில் 7 போட்டிகளை வெல்ல வேண்டும். இங்கிலாந்து அணிக்கு எதிராக 3, பாகிஸ்தானுக்கு எதிராக 2 போட்டிகளை வெளியிலும், சவுத் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக தலா இரண்டு டெஸ்ட் போட்டியில் உள்நாட்டில் விளையாடுகிறது.

இங்கிலாந்து: 12 டெஸ்ட்களில் 12 போட்டிகளையும் வெல்ல வேண்டும். மேற்கிந்திய தீவுகள் 3, இலங்கை 3 என உள்நாட்டிலும், பாகிஸ்தான் 3 நியூசிலாந்து 3 என வெளிநாட்டிலும் விளையாடுகிறது.

பங்களாதேஷ்: 10 டெஸ்ட் போட்டிகளில் 7 டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டும். இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தலா இரண்டு டெஸ்ட் போட்டிகளை உள்நாட்டில் விளையாடுகிறது. பாகிஸ்தான் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெளியில் விளையாடுகிறது.

புதிய செய்திகள் : “ரோகித்துக்கு இப்படி செய்யக்கூடாது.. ஹர்திக் வசமா சிக்கிட்டாரு” – சிஎஸ்கே நட்சத்திர முன்னாள் வீரர் பேட்டி

இலங்கை : 11 டெஸ்ட் போட்டிகளில் 8 போட்டிகளை வெல்ல வேண்டும். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தலா 2 டெஸ்ட் போட்டிகளில் உள்நாட்டிலும், பங்களாதேஷ் 2, சவுத் ஆப்பிரிக்கா 2, இங்கிலாந்து 3 டெஸ்ட் போட்டிகள் என வெளிநாட்டில் விளையாட வேண்டும்.

- Advertisement -