ரோகித் பாய் இந்த முக்கியமான வேலையை குடுத்திருக்காரு.. தோனி காட்டிய ரூட்ல போவேன் – ஷிவம் துபே பேட்டி

0
168
Shivam

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு ஆல் ரவுண்டராக சிவம் துபேவை இந்திய தேர்வுக்குழு தேர்வு செய்தது. இதன் காரணமாக அவருக்கு பொறுப்புகள் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் அணி நிர்வாகத்தில் இருந்து தனக்கு என்ன மாதிரியான வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
என்பது குறித்து பேசி இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிவம் துபேவுக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டம் அவருக்கு சரியாக செல்லவில்லை. ஆனால் சிஎஸ்கே அணிக்கு தனி ஒரு வீரராக அதற்கு முன்பான போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

ஆரம்ப கட்டத்தில் கவனிக்கப்படும் வீரராக இருந்து உடனடியாக இந்திய அணியில் வாய்ப்பையும் பெற்று, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியாததால் வெளியேறினார். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு திரும்பி வந்த பிறகு மகேந்திர சிங் தோனியின் அறிவுரைகள் அவரை இந்திய அணிக்குள் மீண்டும் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் சிவம் துபே “நான் மீண்டும் திரும்பி வந்ததில் மகி பாயின் பங்கு மிகப் பெரியது. அதுபோன்ற ஒரு லெஜெண்ட் வீரர் உங்களை கவனித்து உங்களுக்கு அறிவுரைகள் கூறினால் அது மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கிறது. மேலும் அவர் போன்று ஒருவர் உங்களை பாராட்டினால் அது பெரிய உற்சாகத்தை கொடுக்கிறது. மேலும் அவர் எனக்கு கொடுத்த சிறு அறிவுரைகள் கூட என்னுடைய கிரிக்கெட்டை பெரிய அளவில் மாற்றி இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் நான் ஒரு ஓவர் மட்டுமே வீசினேன். நான் வீசிய அந்த ஒரு ஓவரிலும் எனக்கு விக்கெட் கிடைத்தது. இது எனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக அமைந்தது. இருந்தாலும் நான் எனது திறமைகளை மெருகேற்ற வேண்டும் என்று உணர்ந்ததால் தொடர்ந்து வலையில் பயிற்சி செய்து வருகிறேன்.

இதையும் படிங்க : விராட் ரோகித்துக்கு டி20 உலக கோப்பை கணக்கு எக்ஸாம் மாதிரி.. காரணம் இதுதான் – அஸ்வின் பேட்டி

தற்பொழுது இந்த உலகக் கோப்பையில் ரோகித் பாய் மற்றும் டிராவிட் பாய் இருவரும் என்னை ஒரு ஆல் ரவுண்டராக வெளிப்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். எப்பொழுது வேண்டுமானாலும் நான் இரண்டு மூன்று ஓவர்கள் வீச வேண்டியது வரும் எனவும் கூறி இருக்கிறார்கள். எனவே நான் இதற்கு தயாராகி வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -